
தனுஷ் கேமராவுக்கு முன்பு வந்தால் கண் இமைக்கும் நேரத்தில் கதாபாத்திரமாக மாறிவிடுவார். அதை தான் அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள விரும்புகிறேன் என நடிகை அமிரா தஸ்துர் தெரிவித்துள்ளார்.
தனுஷின் அனேகன் படம் மூலம் கோலிவுட் வந்தவர் அமிரா தஸ்தூர். அதன் பிறகு ஆளையே காணவில்லை. இந்நிலையில் சந்தானம் ஜோடியாக ஓடி ஓடி உழைக்கணும் படத்தில் நடித்து வருகிறார்.
என்ன அமிரா ஆளையே காணோம் என்று கேட்டதற்கு அவர் கூறுகையில்,
மான்டரின், இந்தி, ஆங்கிலத்தில் வெளியான குங்ஃபூ யோகா படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் நடித்து முடிக்க கால அவகாசம் ஆனதால் பிற படங்களை ஒப்புக் கொள்ளமுடியவில்லை. அதனால் பிரேக் விழுந்துவிட்டது.
குங்ஃபூ யோகா படத்தில் ஜாக்கி சானுடன் நடித்தது அருமையான அனுபவம். அவர் ஒரு சூப்பர் ஸ்டார் போன்றே நடந்து கொள்ளவில்லை. படப்பிடிப்பில் அவர் நண்பராகிவிட்டார்.
சந்தானம் ஜோடியாக நடிப்பதில் பிரச்சனை இல்லை. அவர் மிகவும் ஜாலியான மனிதர். சந்தானத்தின் முந்தைய படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. அவர் மக்களை சிரிக்க வைக்கிறார். நன்றாக வேலை பார்க்கும் யாருடனும் நான் நடிப்பேன்.
தனுஷ் கேமராவுக்கு முன்பு வந்தால் கண் இமைக்கும் நேரத்தில் கதாபாத்திரமாக மாறிவிடுவார். அதை தான் அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள விரும்புகிறேன்.
தனுஷ் நிறைய புத்தகம் படிப்பார். அனேகன் படப்பிடிப்பின்போது வாரம் ஒரு புத்தகத்துடன் அவரை பார்த்துள்ளேன். அவர் பார்க்கத் தான் அமைதியாக இருப்பார் ஆனால் அவருக்கு அனைத்து கிசுகிசுவும் தெரியும் என்கிறார் அமிரா.
Post your comment