தனுஷுக்காக காத்திருக்கு பாலிவுட்!- அமேஸிங் அமைரா

Bookmark and Share

தனுஷுக்காக காத்திருக்கு பாலிவுட்!- அமேஸிங் அமைரா

நாடெங்கும் பறவைக் காய்ச்சல் என்கிறார்கள். அமைராவுக்கு பரீட்சைக் காய்ச்சல்! +2 ரிசல்ட்டைக் கையில் வைத்துக் கொண்டு மும்பையில் அத்தனை பேரும் காலேஜ் அட்மிஷனுக்கு அலைந்தபோது, அமைராவுக்கு மட்டும் சினிமா அட்மிஷன்! ‘இஷ்க்’ ஹிந்திப் படத்தில் பிரதீக் பாபரோடு ஆட்டம் போட்ட பிறகு, கே.வி.ஆனந்தின் ‘அனேக’னுக்காக தனுஷ் உடன் நடிக்கிறார்.

இவ்வளவு வெள்ளை நிறத்துக்கு ஒண்ணு பஞ்சாபியாக இருக்கணும், இல்லை பார்ஸியாக இருக்கணும்... அதில் இரண்டாவதை ‘டிக்’ செய்கிற அழகியோடு பேசினோம்...‘‘காலேஜுக்கு போகலையா?’’

‘‘+2 படிக்கும்போதே ‘ஸ்லிம்மா இருக்கே... மாடலிங் செய்யலாமே’ன்னு தோழிகள் சொன்னாங்க. மாடலிங்கில் மளமளவென வாய்ப்புகள் வர, வோடபோன், மைக்ரோமேக்ஸ் போன்ற விளம்பரங்களுக்கு நடிக்க ஆரம்பிச்சேன்.

கடைசியில் என்ன நடக்கும்..? சினிமாதான். அதற்கும் வந்துட்டேன்! அதோடு இப்போ, பி.சி கல்லூரியில் பி.காம் படிக்கிறேன். ஸ்மிதா பாட்டீல் மகன் பிரதீக்கோடு முதல் அறிமுகம். முதல் வெற்றி.

அப்புறம்தான் இதோ ‘ராஞ்சனா’ ஸ்டார் தனுஷோடு இந்த ‘அனேகன்’. எல்லாம் இயக்குநர் கே.வி.ஆனந்தால் வந்த வாய்ப்பு. ஒரு நல்ல படம் நம்மை அழகா மாத்தி சினிமாவில் பொருத்தமாக வச்சிடும். சினிமா எனக்கு டைம் பாஸ் இல்லை. தியானம்!’’ 


Post your comment





Related News
தனுஷ், சந்தானம் ஹீரோயின் பிகினி போட்டோ லீக் !
நீச்சல் குளத்தில் பிகினியில் தனுஷ் நாயகி
தனுஷிடம் இருந்து அந்த ஒரேயொரு விஷயத்தை மட்டும் கத்துக்க ஆசை: அமிரா
ஜாக்கி சான், அமிரா தஸ்தூர் நடிக்கும் குங்ஃபூ யோகா ரிலீஸ் தேதி இதோ!
சந்தானம் ஜோடியாகும் தனுஷ் நாயகி!
ஜாக்கிசான் படத்தில் இலியானாவிற்கு பதில் அமைரா!
பாவாடை தாவணியில் அமைரா தஸ்துர்
சம்பளம் தராமலே பிகினியில் தோன்றிய நடிகை
2015ல் அடிக்குது அழகு புயல் - ஸ்பெஷல் ஸ்டோரி!
அமைராவுக்கு தனுஷ் சொன்ன பாலிவுட் கிசுகிசுக்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions