ஒளிப்பதிவாளர் ஆனந்த குட்டன் மறைவு

Bookmark and Share

ஒளிப்பதிவாளர் ஆனந்த குட்டன் மறைவு

விஜய்-ஷாலினி நடிப்பில் வெளியான ‘காதலுக்கு மரியாதை’, ‘கண்ணுக்குள் நிலவு’ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் ஆனந்த குட்டன். இப்படத்தையடுத்து விஜய் நடிப்பில் வெளியான ‘பிரண்ட்ஸ்’ படத்திற்கும் இவர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் முன்னணி இயக்குனர் பாசில் இயக்கும் படங்களில் தொடர்ந்து பணியாற்றியுள்ளார்.

தென்னிந்திய திரை உலகின் முன்னணி ஒளிப்பதிவாளராக இருந்த ஆனந்த குட்டன், இதுவரை 150 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். சிறந்த ஒளிப்பதிவுக்காக பல விருதுகளும் பெற்றுள்ளார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஆனந்த குட்டன், தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். நோய் கடுமையான நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 61. அவருக்கு கீதா என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions