ஆனந்தராஜின் அடுத்த ரவுண்டு!

Bookmark and Share

ஆனந்தராஜின் அடுத்த ரவுண்டு!

தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி பின்னர் வில்லன் ஆனவர் ஆனந்தராஜ். அதன்பிறகு ஏராளமான தென்னிந்திய படங்களில் வில்லனாக நடித்து வந்த அவரது மார்க்கெட் ஒருகட்டத்தில் சரிந்துவிட்டது.

அதனால் படவாய்ப்பே இல்லாமல் பல ஆண்டுகளாக இருந்துவந்தார். இந்த நிலையில், முண்டாசுப்பட்டி படத்தில் காமெடி கலந்த ஒரு வில்லன் வேடத்தில் நடித்தார். அந்த படம் வெற்றி பெற்றதால் மீண்டும் இயக்குனர்களின் கவனத்துக்கு வந்த அவர், தற்போது விஜயசேதுபதி நடிக்கும் நானும் ரெளடிதான் என்ற படத்தல் வில்லனாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்த படத்தில் அவரது மிரட்டலான நடிப்புக்கு பெரிய அளவில் கைதட்டல் கிடைத்து வருகிறது. அதோடு, சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் பாயும்புலி படத்திலும் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார் ஆனந்தராஜ்.

அவருக்கு அப்படத்தில் எந்தமாதிரியான வேடம் என்று விசாரித்தபோது, இந்த படத்தில் ஆனந்தராஜ்க்கு வில்லன் வேடம் இல்லை. ஆனால் சற்று நெகட்டிவ் கலந்த போலீஸ் வேடம் என்கிறார்கள்.

அந்த வகையில் இதே படத்தில் போலீஸ் நாயகனாக நடிக்கும் விஷாலுக்கும், ஆனந்தராஜ்க்குமிடையே எதிரும் புதிருமான காட்சிகள் நிறைய உள்ளதாம். அதனால் இந்த படத்திற்கு பிறகு ஆனந்தராஜின் அடுத்த ரவுண்டு அமோகமாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions