ஆனந்த கண்ணனும் ஹீரோவாகிறார்!

Bookmark and Share

ஆனந்த கண்ணனும் ஹீரோவாகிறார்!

1997ல் முரளி நடித்த காலமெல்லாம் காதல் வாழ்க படத்தை இயக்கியவர் ஆர்.பாலு. அதையடுத்து உன்னுடன் என்ற படத்தை இயக்கியவர். பின்னர் பல ஆண்டுகளாக எந்த படமும் இயக்கவில்லை.

ஆனால் 17 ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது அவர் இரண்டு படங்களை இயக்கியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே இந்த படங்களின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

இத்தனை நாளாய் எங்கிருந்தாய் என்ற பெயரில் இணையதளத்தை மையமாக வைத்து ஒரு படம் இயக்கியுள்ள அவர், அப்படத்தில் சின்னத்திரை காம்பையர் ஆனந்த கண்ணனை ஹீரோவாக நடிக்க வைத்திருந்தார். அப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி விட்டது.

சின்னத்திரையில் நிகழ்சசி தொகுப்பாளர்களாக இருந்து சிவகார்த்திகேயன், மா.கா.பா.ஆனந்த் உள்பட பல நடிகர்கள் தற்போது சினிமாவில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்திருப்பதால் ஆனந்த கண்ணன் நடித்துள்ள இந்த படமும் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கும் ஆர்.பாலு, இதன்பிறகு தனது சினிமா மார்க்கெட் மீண்டும் சூடுபிடிக்கும் என்றும் எதிர்பார்க்கிறார்.

அதேபோல் ஏப்ரல் 16-ந்தேதி அப்படத்தை வெளியிடும் அவர், இத்தனை நாளாய் எங்கிருந்தாய் என்ற டைட்டிலை ஒருமுறை பார்த்தேன்  என்று மாற்றி வெளியிடுகிறார். முன்னதாக, இந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பே மேலும் சில படங்களில் கமிட்டாகி விட வேண்டும் என்று சில புதுமுக டைரக்டர்களிடம் கதை கேட்டு வரும் ஆனந்த கண்ணன், எனக்கு சின்னத்திரை மூலம் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால் நான் நடித்துள்ள படத்துக்கு ரசிகர்கள் பெரிய அளவில் ஆதரவு கொடுப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்து வருகிறார்.

 


Post your comment





Related News
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
தன்னுடைய இயல்பான நடிப்பால் என் வேலையை எளிதாக்கிய இந்துஜா - இயக்குனர் ஆர் கண்ணன்!
இறைவனை இசை மூலம் காணமுடியும்: இளையராஜா
சிவகார்த்திகேயனை வைத்து உருவான ‘ஆன்தம்’ ஆல்பம்
கதை எழுதுவதற்காக குப்பை அள்ளிய இயக்குனர்
\'சேட்டை\' ஆர். கண்ணன் இயக்கும் அடுத்தபடம்! \'போடா ஆண்டவனே என் பக்கம்\'
ஆர்.கண்ணன் இயக்கத்தில் போடா ஆண்டவனே என் பக்கம்
ஆனந்தயாழை பாடலை அடிக்கடி போட்டு ஆறுதல் தேடிய விஜய் டிவி
நித்யானந்தா வழக்கு சுவாமி சத்யானந்தா படத்தை வெளியிட தடை கோரி!
பழம்பெரும் நடிகர் : இயக்குநர் எஸ்.ஏ.கண்ணன் மரணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions