5 வருடங்களில் கயல் ஆனந்திக்கு இது முதல்முறை

Bookmark and Share

5 வருடங்களில் கயல் ஆனந்திக்கு இது முதல்முறை

நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’. 

இயக்குநர் ராமிடம் இணை இயக்குனராக பணியாற்றிய மாரி செல்வராஜ், இயக்குநராக அறிமுகமாகும் இந்த படத்தில் பரியேறும் பெருமாளாக, சட்டக்கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் கதிர் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார்.முக்கிய கதாபாத்திரங்களில் யோகி பாபு, லிஜீஷ், மாரிமுத்து மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பலரும் நடித்திருக்கிறார்கள். 

இந்த படத்திற்காக முதல்முறையாக கயல் ஆனந்தி தமிழில் டப்பிங் பேசியிருக்கிறார். கயல் ஆனந்தி சினிமாவில் நடிக்க வந்து 5 ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில், படத்தில் அவரது கதாபாத்திரம் பூரணத்துவம் அடைய வேண்டும் என்பதற்காக இயக்குநர் மாரி செல்வராஜ் கேட்டதற்கு இணங்க, முதல்முறையாக தனது சொந்த குரலில் தமிழில் டப்பிங் பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்க்கது.

சந்தோஷ் நாராயணன் இசையில் படத்தின் இசையை நடிகர் தனுஷ் சமீபத்தில் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். படத்தின் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படம் வருகிற செப்டம்பர் 28-ந் தேதி ரிலீசாக இருக்கிறது. 


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions