‘பசங்க’ பாண்டியின் நடிப்பை பார்த்து கால்ஷீட் கொடுத்த ‘கயல்’ ஆனந்தி

Bookmark and Share

‘பசங்க’ பாண்டியின் நடிப்பை பார்த்து கால்ஷீட் கொடுத்த ‘கயல்’ ஆனந்தி

‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’ போன்ற எதார்த்த படங்களைக் கொடுத்தவர் ஜெகன்நாத். இவர் இயக்கும் புதிய படத்துக்கு ‘என் ஆளோட செருப்பை காணோம்’ என்று டைட்டில் வைத்திருக்கிறார். ட்ரம்ஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தன் சகோதரர் விஜயன் உடன் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறார். 

இப்படத்தில் ‘பசங்க’ படத்தில் நடித்த பாண்டி ‘தமிழ்’ என்கிற பெயர் மாற்றத்தோடு நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடித்திருக்கிறார். படத்தின் டைட்டிலைக் கேட்டவுடனே படத்தில் ஏதாவது சுவாரஸ்யம் இருக்கும் என்று அனைவருக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. அதற்கான காரணத்தை இயக்குனரே தெரிவித்துள்ளார்.

செருப்பை நாம ஒரு சாதாரண பொருளாகத்தான் பார்க்கிறோம். அதற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறதில்ல. ஆனா அது நம்மோட வாழ்க்கையிட பல சம்பவங்களை நடத்திட்டுப் போயிடும். இப்படத்திற்கு நாயகனாக நடிக்க பாண்டியை என்னுடைய நண்பர்கள் சிபாரிசு செய்தார்கள். நானும் தயக்கத்துடனயே பாண்டியிடம் சென்று இப்படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியை நடித்துக் காட்டச் சொன்னேன்.

அந்த காட்சியை நான் எதிர்பார்த்த மாதிரியே பாண்டி நடித்துக் காட்டினார். உடனேயே அவரை இப்படத்திற்கு புக் செய்துவிட்டேன். பாண்டிதான் ஹீரோ என்றதும் ஆனந்தி இதில் நடிக்க கொஞ்சம் தயங்கினார். அப்புறம், நானே அவருக்கு நேரடியாக சென்று பாண்டி நடித்துக்காட்டிய வீடியோவை காட்டியதும் ஆனந்தி ஒத்துக்கொண்டார். கால்ஷிட் சொதப்பல் இல்லாமலும் நடித்துக் கொடுத்துள்ளார். 

செருப்பும், மழையும் படத்தின் பெரும்பாலான காட்சிகளை ஆக்கிரமித்திருப்பதால் பெரும்பாலான காட்சிகளை கடலூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் நிஜ மழையில் எடுத்திருக்கிறார்கள். யோகி பாபு, சிங்கம் புலி, பால சரவணன் என தமிழில் இப்போதைக்கு இருக்கிற அத்தனை காமெடியன்களையும் இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கிறார்கள். 


Post your comment

Related News
பிக் பாஸ் சீசன்-2க்கு வர முடியாது, பிரபல முன்னணி நடிகரால் அப்செட்டான ரசிகர்கள்.!
காதலருடன் கவர்ச்சியில் மிக நெருக்கமாக பிரபல நடிகை - வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.!
நான் தப்பா நினச்சிட்டேன், மன்னிச்சிக்கோ பேபி - ப்ரியங்காவிடம் மன்னிப்பு கேட்ட பிரபலம்.!
சூப்பர் ஸ்டாரின் ஒத்த வார்த்தைக்காக காத்திருக்கும் மூன்று மெகா ஹிட் இயக்குனர்கள்.!
சத்தியமா அது உண்மை இல்லை, நம்பாதீங்க - ஓவியா புலம்பல்.!
ஓப்பனிங் கிங் தல தான், ஆனால் விஜய் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!
தயாரிப்பாளராக மாறிய சிவகார்த்திகேயன்!
தாமிரபரணி பானுவின் மகளா இது? என்னவொரு அழகு - புகைப்படம் இதோ.!
பிரபு தேவாவின் அடுத்த படத்தில் கேப்டன் விஜயகாந்த் - அதிரடி தகவல்.!
OMG என்ன சம்மு இப்படி ஆகிட்டீங்க? அதிர்ச்சியில் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions