பாம்பென்றால் படையே நடுங்கும் போது... ஆனந்தி மட்டும் அலறாமல் அல்வாவா சாப்பிடுவார்..!

Bookmark and Share

பாம்பென்றால் படையே நடுங்கும் போது... ஆனந்தி மட்டும் அலறாமல் அல்வாவா சாப்பிடுவார்..!

சண்டி வீரன் படப்பிடிப்பின் போது நடிகை ஆனந்தி, பாம்புகள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த படப்பிடிப்பில் பயம் கலந்த பீதியுடன் நடித்தாராம். ‘பொறியாளன்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை ஆனந்தி. அதனைத் தொடர்ந்து, பிரபு சாலமனின் ‘கயல்' படம் மூலம் ஆனந்தி திறமையான நடிகைகள் பட்டியலில் இணைந்தார்.

இவர் தற்போது சண்டி வீரன், திரிஷா இல்லன்னா நயன்தாரா என இரண்டு தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.‘சண்டி வீரன்' படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாகவும், 'திரிஷா இல்லன்னா நயன்தாரா' படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாகவும் கயல் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இதில் சற்குணம் இயக்கி வரும் ‘சண்டி வீரன்' படப்பிடிப்பு சமீபத்தில் தஞ்சாவூரிலுள்ள ஏரி ஒன்றில் நடந்திருக்கிறது.அப்போது மான்டேஜ் பாடலுக்கான இந்த படப்பிடிப்பின் போது ஆனந்திக்கு மிக அருகில் பாம்பு ஒன்று நின்று கொண்டிருந்ததாம்.

முதலில் இதை கவனிக்காத ஆனந்தி தைரியமாகத் தான் நடித்துக் கொண்டிருந்திருக்கிறார்.எதேச்சையாக தனக்கு அருகில் பாம்பு இருப்பதைக் கண்டு பதறி விட்டாராம் ஆனந்தி. அந்த இடத்தைவிட்டு அலறி அடித்துக் கொண்டு ஓடியிருக்கிறார்.

பிறகு அந்த ஏரிக்கு அருகே பாம்பு நடமாட்டம் எல்லாம் சகஜம் என படப்பிடிப்புக் குழுவினர் தைரியம் கொடுத்து, மீதிக் காட்சிகளில் ஆனந்தியை நடிக்க வைத்துள்ளனர். பாம்பென்றால் படையே நடுங்கும் போது, ஆனந்தி மட்டும் அலறாமல் அல்வாவா சாப்பிடுவார்..!


Post your comment





Related News
5 வருடங்களில் கயல் ஆனந்திக்கு இது முதல்முறை
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
நாகினி சீரியல் கவர்ச்சி நடிகைக்கு கிடைத்த பெரும் வரவேற்பு! ரசிகர்கள் அதிர்ச்சி
கயல் ஆனந்தியின் கால்களை ரசித்த இசையமைப்பாளர்!
கந்து வட்டி கொடுமையால் கலங்கி நிற்கும் பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
‘பசங்க’ பாண்டியின் நடிப்பை பார்த்து கால்ஷீட் கொடுத்த ‘கயல்’ ஆனந்தி
2 கன்டிஷன் போடும் ஆனந்தி: கடுப்பில் பல்லை கடிக்கும் தயாரிப்பாளர்கள்
ஆனந்தியின் செருப்பை தேடி அலைந்த கதாநாயகன் - என்ன கொடுமை இது!
கயல் ஆனந்தியை காதலிக்கும் யோகி பாபு
ரசிகர்களிடம் கலாய் வாங்கிய KIK வசூலில் எப்படி தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions