பிருத்விராஜின் 'அனார்கலி'யில் 3-வதாக இணைந்த ஹீரோயின்..!

Bookmark and Share

பிருத்விராஜின் 'அனார்கலி'யில் 3-வதாக இணைந்த ஹீரோயின்..!

மலையாளத்தில் தயாராகி வரும் 'அனார்கலி' படத்தில் பிருத்விராஜ் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி தரும் பயிற்சியாளராக நடிக்கிறார். காமெடியும் சாகசங்களும் நிறைந்த ஒரு ஜனரஞ்சகமான படம் தான்.

சாச்சி என்பவர் இயக்கும் இந்தப்படத்தில் பிஜுமேனன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப்படத்தில் கதாநாயகிகளாக 'அமரகாவியம்' புகழ் மியா மற்றும் பிரியல் கோர் இருவரும் நடிக்கிறார்கள்..

இதில் மியா டாக்டர் ஷெரீன் என்கிற கேரக்டரில் நடிக்கிறார். இப்போது இன்னுமொரு கதாநாயகியாக சம்ஸ்கிருதி ஷெனாய் என்பவர் இணைந்திருக்கிறார். மலையாள சினிமாவை பொறுத்தவரை இவர் ஒரு புதுமுகம் தான்.

இந்தப்படத்தில் சம்ஸ்கிருதிக்கு லட்சத்தீவுகளில் வசிக்கும் முஸ்லீம் பெண் கேரக்டராம். அதுமட்டுமல்ல எம்.பி.பி.எஸ் மாணவியும் கூட. இதுவரை மலையாள சினிமாக்களில் பார்த்திராத முஸ்லீம் பெண்ணாக வித்தியாசமான கேரக்டர் கிடைத்ததில் சம்ஸ்கிருதிக்கு ரொம்பவே சந்தோஷமாம்.

லட்சத்தீவுகளின் அருகில் உள்ள கவராத்தி தீவுகளில் நடைபெற்ற இதன் படப்பிடிப்பில் கலந்துகொண்ட இவர் கதாநாயகி மியாவுடன் சேர்ந்து ஸ்கூபா டைவிங் அடித்து கும்மாளமிட்டிருக்கிறார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions