
கடந்த வாரம் வெளியான பிருத்விராஜின் அனார்கலி படம் அவருக்கு ஹாட்ரிக் வெற்றியாக அமைந்து விட்டது. இந்தப்படத்தில் லட்சத்தீவில் படமாக்கப்பட்ட காட்சிகள் ரசிகர்களுக்கு புது அனுபவத்தை தந்துள்ளது.
இந்தப்படத்தை ஆரம்பிக்கும் முன் எந்த தீவில் படமாக்கலாம் என முடிவு செய்வதற்காக லொக்கேஷன் பார்க்க கிளம்பினார்களாம் அனார்கலி டீம். இயக்குனர் சாச்சி மற்றும் டெக்னீசியன்கள் உட்பட ஐந்து பேர் ஓர் படகில் சுஹேலி பார் என்கிற தீவைப்பற்றி கேள்விப்பட்டு அங்கே பயணப்பட்டார்களாம்.
கொச்சியில் இருந்து மூன்றுமணி நேரத்தில் போய்விடலாம் என கரையில் இருப்பவர் சொல்லி அனுப்பினார்களாம்..ஆனால் கடலில் வழி தெரியாமல் சுற்றி அலைந்ததுதான் மிச்சமாம். போதாதற்கு ஜி.பி.எஸ் சிஸ்டமும் பெயிலாகிவிட்டது.
இதில் ஒன்பது அடி உயரத்திற்கு ராட்சத அலைகள் வேறு எழும்பி படகின் மீது மோதி மரண பயத்தை காட்டிவிட்டதாம். ஒரு வழியாக 12 மணி நேரம் கழித்து அங்கே சென்றர்களாம்.
ஆனால் அங்கே படப்பிடிப்பை நடத்துவது சிரமம் என்று அறிந்தபின்னர் அங்கிருந்து லட்சத்தீவுக்கு போகலாம் என முடிவெடுத்தவர்கள், வரும் வழியிலும் பல இன்னல்களை சந்தித்தார்களாம்.
போகும்போதே வழி மாறி சுற்றியதில் எரிபொருளும் குறைந்துவிட கடவுளை பிரார்த்திக்க ஆரம்பித்துவிட்டார்களாம். கடைசியில் இறைவனும் இயற்கையும் அவர்களை ரொம்பவும் சோதிக்காமல் லட்சத்தீவில் கொண்டுபோய் சேர்த்தனவாம்.
Post your comment
Related News | |
▪ | பிருத்விராஜின் \'அனார்கலி\'யில் 3-வதாக இணைந்த ஹீரோயின்..! |
![]() |