ஆந்திராவுக்கு சுற்றுலா சென்ற சினிமா உதவி இயக்குனர், காமிராமேன் நீரில் மூழ்கி பலி

Bookmark and Share

 ஆந்திராவுக்கு சுற்றுலா சென்ற சினிமா உதவி இயக்குனர், காமிராமேன் நீரில் மூழ்கி பலி

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் புத்தூர் அருகே உள்ள சதாசிவ கோனேவில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில் உள்ளது.

நீர்வீழ்ச்சி, இயற்கை எழிலுடன் உள்ள இந்த வனப்பகுதிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏராளமானோர் சுற்றுலா செல்வது உண்டு.

சினிமா குழுவினர் இங்கு படப்பிடிப்பு நடத்துவார்கள். சென்னையைச் சேர்ந்த சினிமா குழு நண்பர்கள் 6 பேர் சதாசிவ கோனேவுக்கு சுற்றுலா சென்றனர்.

இவர்களில் போரூரைச் சேர்ந்த காமிராமேன் பிரேம், உதவி இயக்குனர் விக்னேஷ் (24), தீபன், மதன், நவீன், சுகுமார் ஆகியோருடன் சதாசிவ கேனேவுக்கு சுற்றுலா சென்றனர்.

அங்குள்ள காட்டேஜில் அறை எடுத்து 2 நாள் தங்கினார்கள். நேற்று அவர்கள் சென்னை திரும்ப முடிவு செய்து புறப்பட்டனர். வழியில் உள்ள குளத்தில் இறங்கி ஆனந்தமாக குளித்தனர்.

இதில் நீச்சல் தெரியாத பிரேம், விக்னேஷ் ஆகியோர் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள்.

இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். வடமாலைபேட்டை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராஜசேகர ரெட்டி மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரில் மூழ்கிய பிரேம், விக்னேஷ் இருவரின் பிணத்தையும் மீட்டனர்.

அவர்கள் உடல் புத்தூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

 


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions