
கேரளாவில் இருந்து வந்தவர்தான் என்றாலும் தமிழ் சினிமாவுக்காக பாடுவது, நடிப்பது என்று மலையாள சினிமாவை மறந்து இங்கேயே தங்கிவிட்டவர் தான் ஆண்ட்ரியா.
இவர் முதன்முதலாக மலையாளத்தில் பஹத் பாசிலுடன் இணைந்து அன்னயும் ரசூலும் படத்தில் நடித்தார். படமும் சூப்பர்ஹிட்டுதான்.
ஆனால் கொஞ்ச நாட்களிலேயே பஹத் பாசில், ஆண்ட்ரியாவை காதலிப்பதாக செய்தி வெளியிட்டதால் ஷாக் ஆகிப்போனார் ஆண்ட்ரியா.
அதையடுத்து மீண்டும் மலையாளத்தில் நடிக்க அழைத்தபோது மறுத்து விட்டார். ஆனால் லண்டன் பிரிட்ஜ் என்ற படத்தில் பிருத்விராஜூடன் நடிக்க வாய்ப்பு வரவே அதை தவிர்க்க மனம் இல்லாமல் நடித்தார்.
ஒருவழியாக பஹத்தின் கவனம் நஸ்ரியாவின் பக்கம் திரும்பியதும் தான் நிம்மதி பெருமூச்சுவிட்டார்.
அதையடுத்து ஃபயர்மேன் என்கிற படத்தில் மெகாஸ்டார் மம்முட்டியுடன் நடித்துள்ளார். இந்தப்படம் விரைவில் ரிலீஸாக இருக்கிறது.
வருடத்திற்கு மலையாளத்தில் ஒரு படம் மட்டும் பண்ணினால் போதும் என, தற்போது தமிழில் பிசியாக இருக்கும் ஆண்ட்ரியா நினைத்தாலும் மலையாள திரையுலகம் அவரை விடுவதாக இல்லை போலும்.
ஆனால் இந்தமுறை வாய்ப்பு தேடிவந்திருப்பது சூப்பர்ஸ்டாருக்கு ஜோடியாக நடிப்பதற்குத்தான். ஆம். மோகன்லால்-ரஞ்சித் கைகோர்த்திருக்கும் படத்தில் நடிக்க ஆண்ட்ரியா ஒப்பந்தமாகியிருக்கிறார்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்-15ஆம் தேதி துவங்க இருக்கிறது.
Post your comment