ஆண்ட்ரியாவுக்கு சென்னை தமிழ்தான் புரியுமாம்!

Bookmark and Share

ஆண்ட்ரியாவுக்கு சென்னை தமிழ்தான் புரியுமாம்!

கெளதம்மேனனின் கண்டு பிடிப்புகளில் ஆண்ட்ரியாவும் ஒருவர். பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில்தான் அவர் அறிமுகமானார். அதையடுத்து செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கவனிக்கப்படும் நடிகையானார் ஆண்ட்ரியா.

அப்படியே படிப்படியாக வளர்ந்து வந்த அவர், விஸ்வரூபம் படதில் கமலுடன் நடித்தவர், பின்னர் அப்படத்தின் 2ம் பாகம் மட்டுமின்றி, கமலின் உத்தமவில்லன் படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

அதையடுத்து பல படங்களை கைப்பற்றியிருக்கும் ஆணட்ரியாவுக்கு தமிழ் பேசவே தெரியாது என்பதால் ஆங்கிலம் தெரியாத இயக்குனர்கள் அவரை வைத்து படம் பண்ண தயங்கி நின்றனர்.

இந்த நிலையில், விஸ்வரூபம் படத்தில் நடித்தபோது, ஓய்வு நேரங்களில் அவருக்கு தமிழ் ஆசானாக மாறியிருக்கிறார் கமல். விளைவு, அதன்பிறகு படப்பிடிப்பில் உள்ளவர்களிடம் தனக்குத் தெரிந்த தமிழில் பேசத் தொடங்கியிருக்கிறார் ஆண்ட்ரியா.

ஆனால் கமல் அவருக்கு சுத்தமான தமிழை கற்றுக்கொடுக்க இவரோ, பின்னர் சென்னைவாசிகளிடம் அதிகமாக பேசிப்பழகியதால், இப்போது சென்னை மக்கள் பேசும் தமிழ்தான் ஆண்ட்ரியாவுக்கு புரிகிறதாம்.

முக்கியமாக, சில டைரக்டர்கள் சுத்த தமிழில் அவரிடம் பேசினால், அந்த வார்த்தைகளில் அர்த்தம் தெரியாமல் தடுமாறுகிறாராம் ஆண்ட்ரியா. அதையடுத்து உதவி இயக்குனர்கள் சென்னை தமிழில் அவருக்கு சொல்லும்போது நன்றாக அதை மைண்டில் ஏற்றிக்கொண்டு நடிக்கிறாராம் ஆண்ட்ரியா.


Post your comment





Related News
வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு
எனக்கு அந்த நிலைமைகள் இதுவரை ஏற்படவில்லை - ஆண்ட்ரியா
கவர்ச்சியாக நடிக்க மறுக்கும் ஆண்ட்ரியா
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய முன்னணி தமிழ் நடிகை
என் ரசிகர்கள் புத்திசாலிகள் - கமல்
நிர்வாணமாக கூட நடிப்பேன், ஆனால்? - பிரபல நடிகை ஓபன் டாக்.!
விஜய் கூட நடிச்சா தான் இதெல்லாம் நடக்குமா? கொடுமை - பிரபல நடிகை ஆவேச பேச்சு.!
பட்ஜெட்டை விட மூன்று மடங்கு வசூல் செய்து பிரம்மாண்ட சாதனை படைத்த அவள்.!
அரவிந்த் சாமி படத்தில் இணைந்த ஆண்ட்ரியா
நேர்காணலில் ஆண்ட்ரியாவிடம் ஆபாசமாக பேசிய தொகுப்பாளருக்கு எதிர்ப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions