சூரிக்கு ஜோடியான ஆண்ட்ரியா!

Bookmark and Share

சூரிக்கு ஜோடியான ஆண்ட்ரியா!

ஹீரோக்களுக்கு காமெடியன்கள் காதல் தூது சென்று கொண்டிருந்த காலம் மலையேறி விட்டது. இப்போது காமெடியன்களும் தங்களுக்கும் ஜோடி வேண்டும் என்று கூறுகிறார்கள்.

அதனால் சந்தானத்துக்கு படத்துக்கு படம் ஒரு ஜோடி நடிகை கொடுத்து வருகிறார்கள். அதிலும் அவரும் கதாநாயகன் ஆனபிறகு பிரபல நடிகைகளே அவருக்கு ஜோடி சேர்த்து வருகின்றனர்.

இந்தநிலையில், சூரியும் தனது ரேஞ்சை உயர்த்திக்கொள்ளும் முயற்சியாக, தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து தான் நடித்து வரும் ரஜினி முருகன் படத்தில் தனக்கும் ஒரு ஜோடி வேண்டும் என்ற கேட்டு வாங்கியுள்ளாராம்.

அதனால் ஏற்கனவே இவர்களை இணைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை இயக்கிய பொன்ராம் தற்போது இந்த படத்தில் சூரிக்காக ஆண்ட்ரியா என்றொரு ஹாலிவுட் நடிகையை இறக்குமதி செய்திருக்கிறார்.

இந்த ஆண்ட்ரியா, ஹாலிவுட் நடிகை என்றபோதும் சரளமாக தமிழ் பேசுகிறாராம். இங்கிருந்து அங்கு போய் செட்டிலான நடிகையாம். அதனால் தமிழை தவிர வேறு எந்த மொழியும் தெரியாதவரான சூரிக்கு அவருடன் நடிப்பதற்கு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லையாம்.

அதேசமயம், அவருடன் அவ்வப்போது ஆங்கில வார்த்தைகளில் அர்த்தங்களை கேட்டறிந்து கொண்டாராம்.  மேலும், காமெடியனுடன் நெருக்கமாக நடிக்க இங்குள்ள நடிகைகள் தயங்கி வரும் நிலையில், ஆண்ட்ரியாவோ, எந்தவித தயக்கமும் இன்றி சூரியுடன் கட்டிக்கலந்தாடி விட்டாராம்.

அவரது பர்பாமென்ஸையும் தாராள மனதையும் பார்த்து இப்போது மேலும் இரண்டு படங்களுக்கு கமிட்டி பண்ணியிருக்கிறார்களாம். தமிழில் ஏற்கனவே ஒரு ஆண்ட்ரியா இருந்தபோதும், தனது சொந்த பெயரான ஆண்ட்ரியாவை சினிமாவுக்காக மாற்றப்போவதில்லை என்றும் சொல்கிறார் இந்த ஹாலிவுட் ஆண்ட்ரியா. 


Post your comment





Related News
எனக்கு அந்த நிலைமைகள் இதுவரை ஏற்படவில்லை - ஆண்ட்ரியா
கவர்ச்சியாக நடிக்க மறுக்கும் ஆண்ட்ரியா
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய முன்னணி தமிழ் நடிகை
என் ரசிகர்கள் புத்திசாலிகள் - கமல்
நிர்வாணமாக கூட நடிப்பேன், ஆனால்? - பிரபல நடிகை ஓபன் டாக்.!
விஜய் கூட நடிச்சா தான் இதெல்லாம் நடக்குமா? கொடுமை - பிரபல நடிகை ஆவேச பேச்சு.!
பட்ஜெட்டை விட மூன்று மடங்கு வசூல் செய்து பிரம்மாண்ட சாதனை படைத்த அவள்.!
அரவிந்த் சாமி படத்தில் இணைந்த ஆண்ட்ரியா
நேர்காணலில் ஆண்ட்ரியாவிடம் ஆபாசமாக பேசிய தொகுப்பாளருக்கு எதிர்ப்பு
சுசியின் போலி அக்கவுண்டால் பாதிப்பிற்கு ஆளான பிரபலங்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions