மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்கும் ஆண்ட்ரியா-அஞ்சலி..!

Bookmark and Share

மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்கும் ஆண்ட்ரியா-அஞ்சலி..!

'கற்றது தமிழ்' மூலம் கவனம் ஈர்த்து 'தங்கமீன்கள்'  படம் மூலம் மூன்று தேசிய விருதுகளை அள்ளியவர் இயக்குனர் ராம் தற்போது இவர் இயக்கிவரும் 'தரமணி' படத்தை தொடர்ந்து அடுத்து இயக்கவுள்ள படத்தில் கதாநாயகனாக மம்முட்டி நடிக்கிறார்.

2010ல் நடித்த வந்தே மாதரம் படத்தை தொடர்ந்து ஐந்து வருடம் கழித்து மீண்டும் தமிழில் நேரடியாக நடிக்க இருக்கிறார் மம்முட்டி என்பது சந்தோஷமான விஷயம்தான்... மம்முட்டியின் ரீ என்ட்ரிக்கேற்ற கதையாக இது இருக்குமாம்.

யுவன் சங்கர் ராஜா தான் இந்தப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். தற்போது இந்தப்படத்தின் கதாநாயகிகளாக ஆண்ட்ரியாவும் அஞ்சலியும் நடிக்க இருக்கிறார்கள் என தகவல் கிடைத்துள்ளது. 'கற்றது தமிழ்' படம் மூலம் அஞ்சலியை தமிழ்சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் ராம் தான்.

அதேபோல தற்போது தான் இயக்கிவரும் 'தரமணி' படம் மூலம் ஆண்ட்ரியாவின் மாறுபட்ட நடிப்புத்திறனை வெளிக்கொண்டுவர இருப்பவரும் இயக்குனர் ராம் தான்.. ஆக தங்களது ஆஸ்தான இயக்குனர் படத்தில் அதுவும் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்க இந்த இருவருக்கும் கசக்குமா என்ன..?


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions