“ரசூல் மாதிரி ஒருத்தர் கிடைச்சா கல்யாணம் பண்ணிக்குவேன்” - ஆண்ட்ரியா..!

Bookmark and Share

“ரசூல் மாதிரி ஒருத்தர் கிடைச்சா கல்யாணம் பண்ணிக்குவேன்” - ஆண்ட்ரியா..!

டீத்தூள் நல்லா இருக்கு. ஆனா அத பேக்கிங் பண்ணியிருக்கிற டப்பா தான் சரியில்ல... ஆண்ட்ரியா சொல்றது கூட கிட்டத்தட்ட இது மாதிரிதான்.. ஏதாவது புரியுதா..? விஷயத்துக்கு வருவோம்.. சினிமாவில் ஒரு சுதந்திர பறவை போல ஆண்ட்ரியா பாடுகிறார், நடிக்கிறார்.. தனக்கு பிடித்த படம் என்றால் தான் ஒகே.. இல்லையென்றால் எவ்வளவு பெரிய ஹீரோ என்றாலும் வாசல் பக்கம் கை காட்டிவிடுவாராம்.

இதுநாள் வரை அவரது திருமணம் பற்றிய பேச்சும் அடிபட்டதாக தெரியவில்லை.  சமீபத்தில் ஒரு பேட்டியில் எந்தமாதிரி நபரை திருமணம் செய்துகொள்ள விருப்பம் என கேட்டபோது, “ரசூல் மாதிரி ஒருத்தர் கிடைச்சா கல்யாணம் பண்ணிக்குவேன்.. ஆனா அப்படிப்பட்ட ஆளை இன்னும் நான் பார்க்கவில்லை” என்று சொல்லியிருக்கிறார் ஆண்ட்ரியா.

யார் இந்த ரசூல்..? மூன்று வருடங்களுக்கு முன் மலையாளத்தில் 'அன்னயும் ரசூலும்' என்கிற படத்தில் ஆண்ட்ரியா நடித்தார் அல்லவா..? அந்தப்படத்தின் நாயகன் கதாபாத்திரத்தின் பெயர் தான் ரசூல்.. கதாநாயகியை உருகி உருகி காதலிக்கும் கதாபாத்திரம் தான் அந்த ரசூல் கதாபாத்திரம்.. அப்படி ஒரு நபரைத்தான் திருமணம் செய்வாராம் ஆண்ட்ரியா.  

இதில் என்ன பியூட்டி என்றால், அந்தப்படத்தில் ரசூலாக நடித்த பஹத் பாசில் முதலில் ஆண்ட்ரியாவுக்குத்தான் லவ் அப்ளிகேசன் போட்டார். ஆனால் பதறிய ஆண்ட்ரியாவோ, மலையாள திசை பக்கமே ஒரு கும்பிடு போட்டு கொஞ்ச நாள் ஒதுங்கியிருந்தார்.

அதாவது ரசூல் கேரக்டர் ஒகேவாம்.. ஆனா ரசூலா நடிச்ச பஹத் பாசில் கேரக்டர் தான் செட் ஆகவில்லையாம். ஒருவழியாக பஹத் பாசில் நஸ்ரியாவை திருமணம் செய்தபின்னர் தான் நிம்மதி பெருமூச்சு விட்ட ஆண்ட்ரியா, இப்போது ஒன்றிரண்டு மலையாளப்படங்களில் தலைகாட்டி வருகிறார். ஆண்ட்ரியாவுக்கு ஏற்ற ரசூல் எங்கிருக்கிறாரோ..?

 


Post your comment





Related News
வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு
எனக்கு அந்த நிலைமைகள் இதுவரை ஏற்படவில்லை - ஆண்ட்ரியா
கவர்ச்சியாக நடிக்க மறுக்கும் ஆண்ட்ரியா
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய முன்னணி தமிழ் நடிகை
என் ரசிகர்கள் புத்திசாலிகள் - கமல்
நிர்வாணமாக கூட நடிப்பேன், ஆனால்? - பிரபல நடிகை ஓபன் டாக்.!
விஜய் கூட நடிச்சா தான் இதெல்லாம் நடக்குமா? கொடுமை - பிரபல நடிகை ஆவேச பேச்சு.!
பட்ஜெட்டை விட மூன்று மடங்கு வசூல் செய்து பிரம்மாண்ட சாதனை படைத்த அவள்.!
அரவிந்த் சாமி படத்தில் இணைந்த ஆண்ட்ரியா
நேர்காணலில் ஆண்ட்ரியாவிடம் ஆபாசமாக பேசிய தொகுப்பாளருக்கு எதிர்ப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions