மணிரத்னம் காதல் படத்தில் நடிக்க ஆன்ட்ரியா ஆசை

Bookmark and Share

மணிரத்னம் காதல் படத்தில் நடிக்க ஆன்ட்ரியா ஆசை

ஆன்ட்ரியா, தனி ஹீரோயினாக அதிகப் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் ஒரு பரபரப்பான ஹீரோயினாக பேசப்பட்டு வருகிறார். கமல்ஹாசன் கூடவே தொடர்ந்து மூன்று படங்களில் நடித்து விட்டதால் மற்ற இளம் நடிகர்கள் ஆன்ட்ரியாவை தங்களது படங்களில் நடிக்க கூப்பிடவில்லையோ என்றுதான் தோன்றுகிறது.

முதல் முறையாக இளம் நடிகரான ஜெய் ஜோடியாக ஆன்ட்ரியா நடித்த 'வலியவன்' படம் படுதோல்வியடைந்துவிட்டது. தற்போதைக்கு வேறு எந்த முன்னணி இளம் நடிகருடனும் ஆன்ட்ரியா நடிக்கவில்லை.

இப்போதைக்கு ஆன்ட்ரியா நடித்து வரும் ஒரே படம் 'தரமணி' மட்டுமே. 'கற்றது தமிழ்' ராம் இயக்கும் இந்தப் படத்தில் புதுமுகம் வசந்த் ரவியுடன் ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பும் நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. இந்தப் படத்தைத் தவிர வேறு எந்தப் புதுப்படமும் ஆன்ட்ரியாவிற்கு ஒப்பந்தமாகவில்லை. ஆன்ட்ரியாவை முன்னணி இயக்குனர்களும், முன்னணி ஹீரோக்களும் அதிகமாகக் கண்டு கொள்வதேயில்லை.

அந்த வருத்தத்தைப் போக்குவதற்காக அவரே ஒரு பேட்டியில் மணிரத்னம் இயக்கும் காதல் படத்தில் நடிக்க ஆசை என்று வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார். இப்படி ஏதாவது பேட்டி மூலமாவது அவரைப் பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்ள முடியுமில்லையா..?


Post your comment





Related News
எனக்கு அந்த நிலைமைகள் இதுவரை ஏற்படவில்லை - ஆண்ட்ரியா
கவர்ச்சியாக நடிக்க மறுக்கும் ஆண்ட்ரியா
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய முன்னணி தமிழ் நடிகை
என் ரசிகர்கள் புத்திசாலிகள் - கமல்
நிர்வாணமாக கூட நடிப்பேன், ஆனால்? - பிரபல நடிகை ஓபன் டாக்.!
விஜய் கூட நடிச்சா தான் இதெல்லாம் நடக்குமா? கொடுமை - பிரபல நடிகை ஆவேச பேச்சு.!
பட்ஜெட்டை விட மூன்று மடங்கு வசூல் செய்து பிரம்மாண்ட சாதனை படைத்த அவள்.!
அரவிந்த் சாமி படத்தில் இணைந்த ஆண்ட்ரியா
நேர்காணலில் ஆண்ட்ரியாவிடம் ஆபாசமாக பேசிய தொகுப்பாளருக்கு எதிர்ப்பு
சுசியின் போலி அக்கவுண்டால் பாதிப்பிற்கு ஆளான பிரபலங்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions