முடிவெட்ட சொன்னதால் வாய்ப்பை ஒதுக்கிய ஆண்ட்ரியா..!

Bookmark and Share

முடிவெட்ட சொன்னதால் வாய்ப்பை ஒதுக்கிய ஆண்ட்ரியா..!

கேரளாவில் இருந்து வந்தவர்தான் என்றாலும் தமிழ் சினிமாவுக்காக பாடுவது, நடிப்பது என்று மலையாள சினிமாவை மறந்து இங்கேயே தங்கிவிட்டவர்தான் ஆண்ட்ரியா. போனால் போகிறதென்று முதன்முதலாக பஹத் பாசிலுடன் இணைந்து மலையாளத்தில் 'அன்னயும் ரசூலும்' படத்தில் நடித்தார். படமும் சூப்பர்ஹிட்டுதான்.

அப்புறம் கொஞ்சநாள் இடைவெளி விட்டவர் அதையடுத்து 'லண்டன் பிரிட்ஜ்' என்ற படத்தில் பிருத்விராஜூடன் நடிக்க வாய்ப்பு வரவே அதை தவிர்க்க மனம் இல்லாமல் நடித்தார்.

அவ்வளவுதான்.. அதன்பின் மலையாள சினிமா பக்கம் பார்வையை திருப்பவே இல்லை. தமிழைவிட அங்கே சம்பளம் குறைவு என்பதும் ஒரு காரணம் தான். மம்முட்டியுடன் 'பயர்மேன்' படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வந்தது.. ஆனால் நடிக்கவில்லை.

தற்போதுகூட மோகன்லாலுடன் நடிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. படத்தின் ஷூட்டிங் தொடங்கினால் தான் அது கூட உறுதியாகும்.  இந்த சூழ்நிலையில் தான் லால் ஜோஸ் இயக்கிவரும் 'நீ-நா' என்கிற படத்தில் நடிக்க அழைத்தபோது ஆண்ட்ரியா மறுத்துவிட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

காரணம் ரொம்பவே சிம்பிள். இந்தப்படத்திள் ஆண்ட்ரியா நடிக்கும் கேரக்டர் முடியை குட்டையாக 'பாப் கட்டிங்' போல வெட்டியிருக்கவேண்டும்.. ஆனால் ஆண்ட்ரியாவோ முடியை வெட்ட மறுத்து வந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டார். அதனால் இப்போது அந்த வேடத்தில் தீப்தி ஷாதி என்பவர் நடிக்கிறார்.


Post your comment





Related News
வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு
எனக்கு அந்த நிலைமைகள் இதுவரை ஏற்படவில்லை - ஆண்ட்ரியா
கவர்ச்சியாக நடிக்க மறுக்கும் ஆண்ட்ரியா
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய முன்னணி தமிழ் நடிகை
என் ரசிகர்கள் புத்திசாலிகள் - கமல்
நிர்வாணமாக கூட நடிப்பேன், ஆனால்? - பிரபல நடிகை ஓபன் டாக்.!
விஜய் கூட நடிச்சா தான் இதெல்லாம் நடக்குமா? கொடுமை - பிரபல நடிகை ஆவேச பேச்சு.!
பட்ஜெட்டை விட மூன்று மடங்கு வசூல் செய்து பிரம்மாண்ட சாதனை படைத்த அவள்.!
அரவிந்த் சாமி படத்தில் இணைந்த ஆண்ட்ரியா
நேர்காணலில் ஆண்ட்ரியாவிடம் ஆபாசமாக பேசிய தொகுப்பாளருக்கு எதிர்ப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions