அரவிந்த் சாமி படத்தில் இணைந்த ஆண்ட்ரியா

Bookmark and Share

அரவிந்த் சாமி படத்தில் இணைந்த ஆண்ட்ரியா

லாரன்ஸ் நடிப்பில் வெளியான ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்திற்கு இசையமைத்தவர் அம்ரீஷ். இப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக ‘ஹர ஹர மகாதேவகி’ பாடல் பட்டி தொட்டி எங்கும் எதிரொலித்தது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவரது இசையில், ‘பொட்டு’, ‘கர்ஜனை’, ‘யங் மங் ஜங்’, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ ஆகிய படங்கள் உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது. இதில் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ திரைப்படத்தின் பாடல்கள் நவம்பர் 30ம் தேதி வெளியாக இருக்கிறது.

தற்போது படத்தின் இசையில் தீவிரம் காண்பித்து வருகிறார் அம்ரீஷ். இந்நிலையில், இப்படத்தில் இடம் பெறும் சிறப்பு பாடல் ஒன்றை ஆண்ட்ரியா பாடியுள்ளார். இந்த பாடல் சூப்பர் ஹிட்டாகும் என்று அம்ரீஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ திரைப்படத்தை சித்திக் இயக்கியுள்ளார். அரவிந்த் சாமி, அமலா பால் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இவர்களுடன் `தெறி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனாவின் மகள் பேபி நைனிகா மற்றும் மாஸ்டர் ராகவ் நடித்துள்ளனர். முக்கிய வேடத்தில் நிகிஷா பட்டேல் நடித்திருக்கிறார்.

இந்த படத்தின் இசையை டிரிபிள் வி ரெகார்ட்ஸ் நிறுவனம் இம்மாதம் 30ம் தேதி வெளியிடுகிறது. விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது. 


Post your comment





Related News
வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
எனக்கு அந்த நிலைமைகள் இதுவரை ஏற்படவில்லை - ஆண்ட்ரியா
கவர்ச்சியாக நடிக்க மறுக்கும் ஆண்ட்ரியா
பையனூரில் சினிமா ஸ்டூடியோவை 26-ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய முன்னணி தமிழ் நடிகை
எம்.ஜி.ஆர் இருந்து கலைஞர் இறந்திருந்தால்.. மெரினா சர்ச்சைக்கு கமல்ஹாசன் அதிரடி பதிவு
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions