ஆண்ட்ரியாவை சமாதானப்படுத்திய கமல்!

Bookmark and Share

ஆண்ட்ரியாவை சமாதானப்படுத்திய கமல்!

உத்தமவில்லன் படத்தின் விளம்பரங்களை உன்னிப்பாகக் கவனித்தவர்களுக்கு ஒரு விஷயம் பளிச்சென புரியும். அப்படத்தின் அனைத்து விளம்பரங்களிலும் கமல்ஹாசனே நிறைந்திருக்கிறார்.

உத்தமவில்லன் படத்தின் விளம்பரங்கள் அனைத்தும் கமலின் ஒப்புதல் பெற்ற பிறகே வெளிவருவதால், அவரது முகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கமலுக்கு அடுத்தபடியாக உத்தமவில்லன் விளம்பரங்களில் இடம் பெற்றிருப்பது பூஜா குமார்தான்.  

உத்தமவில்லன் படத்தின் இன்னொரு நாயகியான ஆண்ட்ரியாவை பப்ளிசிட்டியில் ஒட்டுமொத்தமாகவே ஓரங்கட்டிவிட்டனர். தன்னை ஓரங்கட்டியதால் மனசுக்குள் கருவிக்கொண்டிருந்தார் ஆண்டரியா.

அதற்கு தக்க பதிலடி கொடுக்க சமயம் பார்த்து காத்திருந்தார். உத்தமவில்லன் மே 1 அன்று ரிலீஸ் ஆவதால் படத்தின் புரமோஷனுக்காக டிவி சேனல்களுக்கு பேட்டி கொடுக்க அழைத்தனர்.

ஆண்ட்ரியா வர முடியாது என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டார். இந்த விஷயத்தை கமலிடம் சொல்வோம் என்றெல்லாம் அன்பாக சொல்லியும்....யார்கிட்ட வேணாலும் சொல்லிக்கோங்க... ஸாரி என்று கடுப்படித்திருக்கிறார். கடைசியில் கமலே ஆண்ட்ரியாவிடம் பேசி, அவரை கன்வின்ஸ் செய்து டிவிக்கு பேட்டி கொடுக்க சொல்லி இருக்கிறாராம். 


Post your comment





Related News
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions