மம்முட்டி நடிக்கும் தமிழ்ப்படத்தில் ஆண்ட்ரியா இல்லையாம்..!

Bookmark and Share

மம்முட்டி நடிக்கும் தமிழ்ப்படத்தில் ஆண்ட்ரியா இல்லையாம்..!

ஐந்து வருட இடைவெளிக்குபிறகு மம்முட்டி தமிழில் மீண்டும் நடிக்க இருக்கிறார் இல்லையா.. தங்கமீன்கள் ராம் இயக்கவுள்ள அந்தப்படத்தில் மமுட்டிக்கு ஜோடியாக ஆண்ட்ரியாவும் அஞ்சலியும் நடிப்பதாக தகவல்களும் வெளியாகின.

ஆனால் அந்த தகவல்களில் துளியும் உண்மையில்லை என மறுத்துள்ள இயக்குனர் ராம், இன்னும் கதாநாயகிகளுக்கான தேடல் நடந்துகொண்டு இருப்பதாகத்தான் கூறியுள்ளாராம்.

தற்போது அவர் இயக்கிவரும் 'தரமணி' படத்தில் ஆண்ட்ரியா நடித்துவருவதால் இப்படி செய்திகள் கிளம்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளாராம். ஏற்கனவே மம்முட்டியுடன் மலையாளத்தில் 'பயர்மேன்' படத்திலேயே ஆண்ட்ரியா நடிப்பதாக இருந்து அந்த வாய்ப்பு கடைசி நேரத்தில் கைநழுவிப்போனது.

இப்போதும் அதுபோலத்தான் ஆகவேண்டுமா..? ஆவலுடன் இருந்த ரசிகர்களுக்கு இது நிறையவே ஏமாற்றம் தரும் தகவல்தான்.. என்ன கொடுமை சார் இது..?


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions