அனேகன் படத்தில் சர்ச்சைக்குரிய வசனம் நீக்கம்: ஐகோர்ட்டில், தணிக்கை வாரியம் தகவல்

Bookmark and Share

அனேகன் படத்தில் சர்ச்சைக்குரிய வசனம் நீக்கம்: ஐகோர்ட்டில், தணிக்கை வாரியம் தகவல்

புதிரை வண்ணார் விடுதலை இயக்கம் என்ற அமைப்பின் தலைவர் கி.ராஜா. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘நடிகர் தனுஷ் நடித்துள்ள ‘அனேகன்’ என்ற படத்தை இயக்குனர் கே.வி.ஆனந்த் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தில், வண்ணார் சமூகத்தை சேர்ந்த பெண்களை மிகவும் கொச்சைப்படுத்தும் வகையில் வசனம் இடம்பெற்றுள்ளது.

எனவே, இந்த ஆட்சேபனைக்குரிய வசனத்துடன் படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும். அந்த வசனத்தை நீக்கிய பின்னரே, தணிக்கை சான்றிதழ் வழங்கவேண்டும் என்று தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தணிக்கை வாரியம் சார்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் சு.சீனிவாசன், ‘சர்ச்சைக்குரிய வசனத்தை ஆனேகன் படத்தில் இருந்து, அந்த படத்தின் இயக்குனர் நீக்கிவிட்டார்’ என்று கூறினார்.

இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி, ‘அனேகன் படம் வெள்ளிக்கிழமை (இன்று) வெளியாகுகிறது. மனுதாரர் அந்த படத்தை பார்த்து விட்டு, சர்ச்சைக்குரிய வசனம் நீக்கப்பட்டு விட்டதா? வேறு ஏதாவது வசனங்கள் இடம் பெற்றுள்ளதா? என்பதை இந்த கோர்ட்டுக்கு தெரிவிக்கலாம். வழக்கு விசாரணையை 16-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன்’ என்று உத்தரவிட்டார். 


Post your comment





Related News
கண்ணாடியை சாப்பிட்ட அனேகன் பட நடிகை ? வைரலான வீடியோ
அது விஜய்க்காக எழுதிய கதையே இல்லை- யார் சொன்னது?
தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டம்! ட்ரண்டிங்
டி.ஆருடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட விஜய் சேதுபதி!
2015-ம் வருடத்தில் முதல்நாள் வசூலில் சாதனை புரிந்த படங்கள்!
செஞ்சுரி அடித்த அனேகன்
டங்காமாரி ரோஹித்தை ஓரங்கட்டும் இயக்குனர்கள்!
ஆவேசப்பட்ட ரசிகர்களை அமைதிப்படுத்திய தனுஷ்
தமிழ்ப்புத்தாண்டுக்கு கத்தி, அனேகன் படங்கள் ஒளிபரப்பு
50வது நாளில் அனேகன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions