செஞ்சுரி அடித்த அனேகன்

Bookmark and Share

செஞ்சுரி அடித்த அனேகன்

இப்போதெல்லாம் படங்கள் 100 நாள் ஓடுவது என்பது குறிஞ்சி பூ பூக்கிற மாதிரி அபூர்வமானது. 100வது நாள் போஸ்டர் அடித்து ஒட்டுவதற்காகவாவது ஒன்றிரண்டு தியேட்டர்களில் ஓட வேண்டும். அந்த பாக்கியம்கூட பெரும்பாலான படங்களுக்கு கிடைப்பதில்லை.

தனுஷ், அமைரா தஸ்தூர், கார்த்திக், ஐஸ்வர்யா தேவன், ஜெகன் நடித்த அனேகன் படத்திற்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

கடந்த பிப்ரவரி 13ந் தேதி வெளியான படம் இன்று 100வது நாளை தொட்டிருக்கிறது. மாற்றான் தோல்விக்கு பிறகு கே.வி.ஆனந்துக்கு கிடைத்த உற்சாக வெற்றி. தனுஷூக்கு வேலையில்லா பட்டதாரிக்கு பிறகு கிடைத்த அடுத்த வெற்றி, பிரமாண்ட படங்களை எடுத்து தோல்விகளையே கண்டுவந்த ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்திற்கு கிடைத்த ஸ்பெஷல் வெற்றி, கார்த்திக்கின் ரீ-என்ட்ரிக்கு சரியான தளம் அமைத்துக் கொடுத்த படம்.

இந்தி நடிகை அமைரா தஸ்தூரை தமிழுக்கு அழைத்து வந்த படம். டங்காமாரி என்ற கானா பாடலாசிரியை அறிமுகப்படுத்திய படம். இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுக்கு ஆறுதல் வெற்றியாக அமைந்த படம்.

30 கோடி பட்ஜெட்டில் உருவான படம் 50 கோடிக்கு மேல் வசூலித்ததாக சொல்கிறார்கள். தமிழ் நாட்டின் பிற நகரங்களில் தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்தாலும் ஒரே தியேட்டரில் 100 நாட்களை தொடவில்லை.

சென்னையில் சத்யம், எஸ்கேப், ஐநாக்ஸ், அபிராமி, சங்கம், பெரம்பூர் எஸ்2, ஏஜிஎஸ் சினிமா, மாயாஜால் வளாகங்களில் 100 நாளை எட்டிப்பிடித்திருக்கிறது.

 


Post your comment





Related News
கண்ணாடியை சாப்பிட்ட அனேகன் பட நடிகை ? வைரலான வீடியோ
அது விஜய்க்காக எழுதிய கதையே இல்லை- யார் சொன்னது?
தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டம்! ட்ரண்டிங்
டி.ஆருடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட விஜய் சேதுபதி!
2015-ம் வருடத்தில் முதல்நாள் வசூலில் சாதனை புரிந்த படங்கள்!
டங்காமாரி ரோஹித்தை ஓரங்கட்டும் இயக்குனர்கள்!
ஆவேசப்பட்ட ரசிகர்களை அமைதிப்படுத்திய தனுஷ்
தமிழ்ப்புத்தாண்டுக்கு கத்தி, அனேகன் படங்கள் ஒளிபரப்பு
50வது நாளில் அனேகன்
கண்டுக்கினியா... \'டங்காமாரி\'ன்னா இத்தான் அர்த்தமாம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions