அனேகனால் கைவிடப்பட்ட ஐஸ்வர்யா தேவன்

Bookmark and Share

அனேகனால் கைவிடப்பட்ட ஐஸ்வர்யா தேவன்

பெங்களூரைச் சேர்ந்த ஐஸ்வர்யா தேவன் மலையாளப் படங்களில் தீவிரமாக நடித்தார். சிம்மாசனம், தி ஹிட் லிஸ்ட், கர்மயோகா, தேங்க்யூ படங்களில் நடித்தார். கன்னடத்தில் ஜெயலலிதா படத்தில் நடித்தார்.

தமிழ் படத்தில் அறிமுகமாகி நல்ல இடத்தை பிடிக்க வேண்டும் என்பது அவரது லட்சியமாக இருந்தது. அப்போதுதான் அனேகன் வாய்ப்பு கிடைத்தது. தனுஷ், கே.வி.ஆனந்த் கூட்டணி என்பதால் மிகுந்த நம்பிக்கையுடன் நடித்தார்.

அனேகன் தனக்கு தமிழில் நல்ல அறிமுகத்தை தரும் என்று நம்பினார். ஆனால் அனேகன் படத்தில் அவருக்கான வாய்ப்பு மிகவும் குறைவு. பர்மா போர்ஷனில் தனுஷை காதலித்து விட்டு அவர் அமைராவை காதலிப்பதால் கோபித்துக் கொண்டு ஜெகனை மணந்து, தனுஷ், அமைராவை போலீசிடம் காட்டி கொடுக்கிற வில்லித்தனமான கேரக்டரில் நடித்தார்.

இதில் தனுஷை காதலிக்கும் சில காட்சிகள் படத்தின் நீளம் காரணமாக குறைக்கப்பட்டுவிட்டது. இந்த ஜென்மத்தில் தனுஷ், அமைராவுடன் ஐ.டி.கம்பெனியில் வேலை பார்ப்பவராக வந்து சில காட்சிகளில் மட்டுமே நடித்துவிட்டு பின்பு மாடியிலிருந்து குதித்து செத்து விடுவார்.

இப்படி உடனுக்குடன் அவர் காட்சிகள் முடிந்து விடுவதால் அவரது கேரக்டர் பெரியதாக பேசப்படவில்லை. இதனால் அடுத்து நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறார் ஐஸ்வர்யா தேவன்.


Post your comment





Related News
தூய்மை நவிமும்பை திட்டத்தின் தூதராக பாடகர் சங்கர் மகாதேவன் நியமனம்
கத்தி சண்டை திரைப்படத்தில் வாய்பளித்த விஷால் : “வாசுதேவன் குமணன் “
விஷாலின் நண்பனாக கத்தி சண்டையில் அறிமுகமாகும் வாசுதேவன்!
நடிகர் சங்க நியமன செயற்குழு உறுப்பினர் வேலூர் வாசுதேவன் வழங்கும் “பிரகாமியம்”!
பாடகர் சங்கர் மாகாதேவன் மருத்துவமனையில் அனுமதி
சிம்புதேவன் என்ன ஆனார்?
தியேட்டரில் அதிரும் புலி கொண்டாட்டம்…
புலி பிறந்தநாளில் புலி
சிம்புதேவனின் இயக்கத்தில் குள்ளமனிதர்கள்
யாரும் கோர்ட்டுக்குப் போயிடக்கூடாது...! உஷார் சிம்புதேவன்...!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions