டங்காமாரி பாடலாசிரியரை தேடும் இசையமைப்பாளர்கள்!

Bookmark and Share

டங்காமாரி பாடலாசிரியரை தேடும் இசையமைப்பாளர்கள்!

முன்பெல்லாம் சினிமாவில் நல்ல தரமான பாடல்களை எழுதுபவர்களுக்குத்தான் அதிக வேல்யூ இருக்கும். ஆனால் இப்போது அது அடியோடு மாறி விட்டது. புரியாத வார்த்தைகளை தேடிப்பிடித்து எழுதுபவர்கள்.

சென்னைத்தமிழில் கானா பாட்டு எழுதுபவர்களுக்குத்தான் மவுசு கூடியிருக்கிறது. அதனால்தான் கானா பாலா பெரும்பாலான படங்களில் பாட்டு எழுதி பாடுவதோடு, பாடல்களில் நடனமாடியும் வருகிறார்.

இந்த நிலையில், தனுஷின் அனேகன் படத்தில் டங்காமாரி ஊதாரி புட்டுக்கின நீநாறி -என்ற கூவம் வாசனை கமகமக்கும் பாடலை எழுதிய ரோகேஷ்க்கு இப்போது கோலிவுட்டில் செம கிராக்கி ஏற்பட்டிருக்கிறது.

இதற்கு முந்தைய கானா பாடல்களையெல்லாம் இந்த பாடல் முறியடித்து ரசிகர்களை பெரிய அளவில் ஆட்டுவித்துக்கொண்டிருப்பதாலேயே இப்போது மற்ற இசையமைப்பாளர்களும் ரோகேஷை தேடிச்சென்று கொண்டிருக்கிறார்கள்.

அதில் முந்திக்கொண்டவர் டி.இமான். ஜெயம்ரவி நடித்துள்ள ரோமியோ ஜூலியட் படத்திற்காக டண்டனக்கா என்றொரு பாடலை ரோகேஷை வைத்து எழுத வைத்துள்ள இமான், அந்த பாடலை அனிருத்தை பாட வைத்து பரபரப்பு கூட்டியிருக்கிறார்.

ஆனால் அனிருத் மட்டும் என்ன சளைத்தவரா, அடுத்து தான் இசையமைக்கும் ஒரு படத்திற்கும் முந்தைய கானா பாடல்களையெல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில் எனக்கொரு பாட்டு எழுதி தாருங்கள் என்று ரோகேஷை கேட்டுக்கொண்டுள்ளாராம். ஆக, தமிழ் சினிமாவின் ட்ரென்ட் இப்படி போய்க்கொண்டிருக்கிறது.


Post your comment





Related News
கண்ணாடியை சாப்பிட்ட அனேகன் பட நடிகை ? வைரலான வீடியோ
50வது நாளில் அனேகன்
\'அனேகன்\' வசூல் 50 கோடி ?
\'அனேகன்\' படத்திற்கும் (அதி) காலை காட்சி...?
அனேகன் படம் ஓடும் தியேட்டர்களை முற்றுகையிடுவோம்: சலவை தொழிலாளர்கள் அறிவிப்பு
தனுஷின் மிகப்பெரிய வெளியீடாக வரும் அனேகன்
அனேகன் ரிலீஸ் உறுதி! வதந்தியை பரப்பாதீர்கள்!
அனேகனில் கொச்சையான வசனங்கள் நீக்கம்!
அனேகன் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் - மதுரை கமிஷனரிடம் சலவைத் தொழிலாளிகள் மனு
\'அனேகன்\' பிப்ரவரி 13ம் தேதி வெளியீடு...








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions