'அனேகன்' படத்திற்கும் (அதி) காலை காட்சி...?

Bookmark and Share

'அனேகன்' படத்திற்கும் (அதி) காலை காட்சி...?

பெரிய நடிகர்கள் நடிக்கும் படத்திற்குத்தான் அதிகாலையிலேயே காட்சிகள் நடப்பது சமீபகாலமாக தமிழ்நாட்டில் பரவி வருகிறது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் விஜய், அஜித் ஆகியோரின் படங்களுக்கான ஆர்பாட்டமான வரவேற்பு காலை 6 மணி காட்சிக்கே இருக்கும்.

முதலில் காலை 6 மணிக்கு ஆரம்பமான முதல் நாள் முதல் காட்சிகள் இப்போது அதிகாலை காட்சிகளாக 4 மணிக்கெல்லாம் கூட ஆரம்பமாகிவிடுகின்றன. இன்று வெளியாகியுள்ள 'அனேகன்' படத்திற்கும் சில திரையரங்குகளில் காலை 8 மணிக்கே முதல் நாள் முதல் காட்சி திரையிடப்பட்டுள்ளதாக தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தனுஷ் படத்திற்கு இப்படிப்பட்ட வரவேற்பு பொதுவாக இருக்கவே இருக்காது என்றும் இந்தப் படத்தைப் பொறுத்தவரையில் கே.வி.ஆனந்துடன் தனுஷ் முதன் முறையாக இணைந்துள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகம் இருக்கிறது என்கிறார்கள்.

அதைக் காசாக்கும் முயற்சியில்தான் இந்த சிறப்பு காலை காட்சிகளாம்.படத்தைப் பார்த்தவர்கள் சமூக வலைத்தளங்களில்  வழக்கம் போல பாராட்டித்தான் எழுதி வருகிறார்கள்.

தனுஷ் இந்திய ஸ்டார் ஆகி விட்டாலும் அவருடைய தமிழ் மார்க்கெட் இந்தப் படத்தின் வெற்றியைப் பொறுத்துத்தான் மீண்டும் தொடரும். ஊருக்கே ராஜான்னாலும் வீட்டுக்கு பிள்ளைதானே...இங்கும் தனுஷிடன் வெற்றி தொடருமா என்பது இன்று தெரிந்து விடும்.


Post your comment





Related News
கண்ணாடியை சாப்பிட்ட அனேகன் பட நடிகை ? வைரலான வீடியோ
50வது நாளில் அனேகன்
டங்காமாரி பாடலாசிரியரை தேடும் இசையமைப்பாளர்கள்!
\'அனேகன்\' வசூல் 50 கோடி ?
அனேகன் படம் ஓடும் தியேட்டர்களை முற்றுகையிடுவோம்: சலவை தொழிலாளர்கள் அறிவிப்பு
தனுஷின் மிகப்பெரிய வெளியீடாக வரும் அனேகன்
அனேகன் ரிலீஸ் உறுதி! வதந்தியை பரப்பாதீர்கள்!
அனேகனில் கொச்சையான வசனங்கள் நீக்கம்!
அனேகன் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் - மதுரை கமிஷனரிடம் சலவைத் தொழிலாளிகள் மனு
\'அனேகன்\' பிப்ரவரி 13ம் தேதி வெளியீடு...








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions