'அனேகன்' வசூல் 50 கோடி ?

Bookmark and Share

'அனேகன்' வசூல் 50 கோடி ?

தனுஷ் நடித்து வெளிவந்துள்ள 'அனேகன்' படம் பத்து நாட்களில் 50 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அந்தப் படத்தில் சம்பந்தப்பட்ட தனுஷ் உட்பட பலரும் தெரிவித்து வருகிறார்கள்.

படம் வெளியான முதல் நாளில் 10 கோடி ரூபாய் வசூலும், இரண்டாவது நாளில் மொத்தமாக 20 கோடி ரூபாய் வசூலும் பெற்றதாக ஏற்கெனவே அறிவித்தனர். யாரெல்லாம் படத்தின் வசூலைப் பற்றி அதிகமாக குறிப்பிடுகிறார்களோ, அந்தச் செய்தியை தன்னுடைய டிவிட்டர் பக்கத்திலும் வெளியிட ஆரம்பித்திருக்கிறார் தனுஷ்.

தமிழ் சினிமாவில் இதுவரை எந்த ஒரு ஹீரோவும் இப்படிச் செய்ததில்லை. ஆனால், தனுஷ் அந்தச் செய்தி உண்மையா, பொய்யா என்று கூடப் பார்க்காமல் அதை வெளியிட்டு வருகிறார்.

திரையரங்க வட்டாரங்களில் விசாரித்த போது இதுவரை அனேகன் படம் தமிழ்நாட்டில் 20 கோடி ரூபாய் வரை மட்டுமே வசூலித்திருக்கும் என்று சொல்கிறார்கள். இப்படம் வெளியான பல தியேட்டர்களிலும் வரும் 27ம் தேதி முதல் 'காக்கி சட்டை' படம் திரையிடப்பட உள்ளது.

தனுஷின் முந்தைய படமான 'வேலையில்லா பட்டதாரி' படம்தான் இதுவரை வெளிவந்த தனுஷ் படங்களிலேயே அதிக வசூலைப் பெற்ற படம். 'அனேகன்' படம் அந்தப் படத்தின் வசூலை எட்டிக் கூடப் பிடிக்க முடியவில்லை.

ஆனாலும், ஒரு பரபரப்புக்காக தங்களுக்குத் தானே படத்தை விவரமாக மார்க்கெட்டிங் செய்து வருகிறார்கள் 'அனேகன்' குழுவினர். இன்னும் பத்து நாட்களில் படம் 100 கோடி வசூலைத் தொட்டது என அவர்கள் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


Post your comment





Related News
கண்ணாடியை சாப்பிட்ட அனேகன் பட நடிகை ? வைரலான வீடியோ
50வது நாளில் அனேகன்
டங்காமாரி பாடலாசிரியரை தேடும் இசையமைப்பாளர்கள்!
\'அனேகன்\' படத்திற்கும் (அதி) காலை காட்சி...?
அனேகன் படம் ஓடும் தியேட்டர்களை முற்றுகையிடுவோம்: சலவை தொழிலாளர்கள் அறிவிப்பு
தனுஷின் மிகப்பெரிய வெளியீடாக வரும் அனேகன்
அனேகன் ரிலீஸ் உறுதி! வதந்தியை பரப்பாதீர்கள்!
அனேகனில் கொச்சையான வசனங்கள் நீக்கம்!
அனேகன் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் - மதுரை கமிஷனரிடம் சலவைத் தொழிலாளிகள் மனு
\'அனேகன்\' பிப்ரவரி 13ம் தேதி வெளியீடு...








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions