தனுஷின் மிகப்பெரிய வெளியீடாக வரும் அனேகன்

Bookmark and Share

தனுஷின் மிகப்பெரிய வெளியீடாக வரும் அனேகன்

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘அனேகன்’. இப்படத்தை ‘அயன்’, ‘கோ’ ஆகிய படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். தனுஷுக்கு ஜோடியாக அம்ரியா தஸ்தூர் நடித்துள்ளார்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பிரபலமாகியுள்ளது. இதைத் தொடர்ந்து இப்படத்தை வருகிற பிப்ரவரி 13-ந் தேதி வெளியிடவுள்ளனர்.

தனுஷ் படங்களிலேயே ‘அனேகன்’தான் அதிக திரையரங்குகளில் திரையிடவுள்ளதாக கூறப்படுகிறது. இதை தனுஷே தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதில், ‘அனேகன்’ பிப்ரவரி 13-ந் தேதி வெளியாகவுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 400 திரையரங்குகளிலும், இந்தியை தவிர்த்து மற்ற மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் இப்படம் திரையிடப்படுகிறது. என்னுடைய படங்களில் ‘அனேகன்’ தான் அதிக திரையரங்குகளில் திரையிடப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

தனுஷ் இந்தியில் நடித்துள்ள மற்றொரு படமான ‘ஷமிதாப்’ வருகிற பிப்ரவரி 6-ந் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படத்தை பிரபல பாலிவுட் இயக்குனர் பால்கி இயக்கியுள்ளார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் கதாநாயகியாக நடித்துள்ளார். 


Post your comment





Related News
கண்ணாடியை சாப்பிட்ட அனேகன் பட நடிகை ? வைரலான வீடியோ
50வது நாளில் அனேகன்
டங்காமாரி பாடலாசிரியரை தேடும் இசையமைப்பாளர்கள்!
\'அனேகன்\' வசூல் 50 கோடி ?
\'அனேகன்\' படத்திற்கும் (அதி) காலை காட்சி...?
அனேகன் படம் ஓடும் தியேட்டர்களை முற்றுகையிடுவோம்: சலவை தொழிலாளர்கள் அறிவிப்பு
அனேகன் ரிலீஸ் உறுதி! வதந்தியை பரப்பாதீர்கள்!
அனேகனில் கொச்சையான வசனங்கள் நீக்கம்!
அனேகன் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் - மதுரை கமிஷனரிடம் சலவைத் தொழிலாளிகள் மனு
\'அனேகன்\' பிப்ரவரி 13ம் தேதி வெளியீடு...








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions