ஜெகன் வைத்த அனேகன் பட டைட்டில்!

Bookmark and Share

ஜெகன் வைத்த அனேகன் பட டைட்டில்!

கே.வி.ஆனந்த் இயக்கத்தில், தனுஷ், அமைரா, கார்த்திக் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியாகியுள்ள படம் அனேகன். ஒரு ஜென்மத்தில் பிரிந்த காதலர்கள் நான்காவது ஜென்மத்தில் இணைவது போன்ற கதை.

நான்கு காலகட்டங்களில் நடக்கும் இந்த கதையில் தனுஷ் நடிப்பில் வெளுத்து வாங்கியிருக்கிறார் என்று பலரும் பாராட்டுகின்றனர். படத்திற்கு நல்லவிதமான விமர்சனங்களும், வரவேற்பு கிடைத்துள்ளன.

குறிப்பாக ஹாரீஸ் ஜெயராஜ் இசையமத்துள்ள டங்கமாரி... பாடலுக்கு செம வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் அனேகன் படத்திற்கு தலைப்பு பிறந்த கதை தற்போது வெளியாகியுள்ளது. சொன்னால் நம்பமாட்டீர்கள் இந்த படத்திற்கு அனேகன் என பெயர் வைத்ததே காமெடி நடிகர் ஜெகன் தான்.

கே.வி.ஆனந்த்தின் அயன், கோ, என... அவரது எல்லா படங்களிலும் தொடர்ச்சியாக நடித்து வரும் ஜெகன், அனேகன் படத்திலும் நடித்துள்ளார். இப்படத்தின் கதையை ஜெகனிடம், கே.வி.ஆனந்த் கூறியிருக்கிறார்.

அப்போது என்னமாதிரி தலைப்பு வைக்கலாம் என்று யோசித்தபோது, திருவாசகத்தில் இடம்பெற்ற, ஏகன் அனேகன் இறைவனடி வாழ்க என்று மாணிக்கவாசர் எழுதிய பாடலில் அனேகன் என்ற வார்த்தையை எடுத்து இப்படத்திற்கு தலைப்பாக வைத்துள்ளனர்.

அனேகன் என்றால் இறைவன் பலவாக இருக்கிறான், ஒருவன் அல்ல என்பதுதான் அதன் அர்த்தம். அனேகன் படத்தின் கதை பல காலக்கட்டங்களில் பயணிப்பதால் இந்த தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்று எண்ணி இதையை தலைப்பாக வைத்துவிட்டனர். 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions