தெலுங்கு குரோர்பதி நிகழ்ச்சியில் அனேகன் படத்தின் ப்ரோமோஷன்

Bookmark and Share

தெலுங்கு குரோர்பதி நிகழ்ச்சியில் அனேகன் படத்தின் ப்ரோமோஷன்

தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘அனேகன்’. இதில் கதாநாயகியாக அம்ரியா தஸ்தூர் நடித்துள்ளார். நவரச நாயகன் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். வருகிற 13-ந் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளிவரவிருக்கிறது.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் ‘அனேகன்’ படம் வெளியாகவுள்ளது.

தெலுங்கில் ‘அனேகடு’ என்ற பெயரில் வருகிறது. இதை விளம்பரப்படுத்துவதற்காக படத்தின் இயக்குனர் கே.வி.ஆனந்த், நடிகர் தனுஷ், நடிகை அம்ரியா தஸ்தூர் மூன்று பேரும் இன்று அதிகாலையிலேயே சென்னையிலிருந்து ஐதராபாத்துக்கு விமானம் மூலம் சென்றனர்.

அங்கு, தெலுங்கு குரோர்பதி நிகழ்ச்சியில் ‘அனேகடு’ படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் மூன்று பேரும் கலந்துகொண்டனர். தெலுங்கு குரோர்பதி நிகழ்ச்சியை நடிகர் நாகர்ஜுனா நடத்தி வருகிறார்.

இந்நிகழ்ச்சியின்போது தனுஷ், கே.வி.ஆனந்த், நாகர்ஜூனா மூவரும் எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படத்தை தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 


Post your comment





Related News
பிக்பாஸ் நிகழ்ச்சியால் என் வேடம் சிறிதாகி விட்டது - யாஷிகா
5 வருடங்களில் கயல் ஆனந்திக்கு இது முதல்முறை
பிரியா ஆனந்த் மலையாளத்தில் கவனம் செலுத்த இதுதான் காரணமா?
மாமியாராக மாறிய தேவயானி
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions