ஏஞ்சலினா ஜோலி விவாகரத்து கேட்டு வழக்கு

Bookmark and Share

ஏஞ்சலினா ஜோலி விவாகரத்து கேட்டு வழக்கு

உலகின் மிக அழகான பெண்களின் ஒருவராக வர்ணிக்கப்படும் பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலிக்கும் (41) அவரது  கணவர் பிராட் பிட்டுக்கும் (52) இடையே சமீபகாலமாக கருத்து வேறுபாடுகள் தலைதூக்கியது. இதனால் இருவரும் பிரிந்து  போக முடிவு செய்திருப்பதாகவும் பேசப்பட்டது.  

இந்நிலையில், கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி ஏஞ்சலினா ஜோலி வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு தொடர்பான சட்ட  கோப்புகளில் அவர் கையெழுத்திட்டிருப்பதாக அவரது வழக்கறிஞர் உறுதி செய்தார். குடும்ப நலன் கருதி ஏஞ்சலினா இந்த  முடிவை எடுத்திருப்பதாகவும் அவர் கூறினார். 

ஒத்துப்போக முடியாத அளவிற்கு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருப்பதாகவும், செப்டம்பர் 15-ம் தேதி முதல் பிரிந்து  வாழ்வதாகவும் ஏஞ்சலினா தனது விவாகரத்து வழக்கு மனுவில் கூறியிருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. 

கணவரின்  செயல்பாடுகளால் மிகவும் அதிருப்தி அடைந்திருப்பதாகவும், அதேசமயம் அவரிடம் இருந்து ஜீவனாம்சம் கேட்கவில்லை  என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஏஞ்சலினாவும் ஹாலிவுட் நடிகரான பிராட் பிட்டும் கடந்த 2004ம் ஆண்டு முதல் சேர்ந்து வாழ்ந்தனர். பின்னர் 2014ம் ஆண்டு  முறைப்படி திருமணம் செய்துகொண்டனர். ஜானி லீ மில்லர் மற்றும் பில்லி பாப் தோன்டான் ஆகியோரை விவாகரத்து செய்த  பின் ஏஞ்சலினா, பிட்டை திருமணம் செய்தார். அதேபோல் பிட்டுக்கு இது இரண்டாவது திருமணம். அவர் முதல் மனைவி  ஜெனிபரை விவாகரத்து செய்துவிட்டு ஏஞ்சலினாவை திருமணம் செய்தார். 

ஏஞ்சலினா-பிராட் பிட் தம்பதிக்கு பெற்ற  குழந்தைகள் 3 பேரும், வளர்ப்பு குழந்தைகள் மூன்று பேரும் உள்ளனர். 


Post your comment





Related News
ஏஞ்சலினா ஜோலி போல் ஆக ஆசைப்பட்டு zombie போல் மாறிய பெண்!
முதுமையைவது மகிழ்ச்சியளிக்கிறது- ஏஞ்சலினா ஜோலி கொடுத்த அதிர்ச்சி!
கம்போடியா இனப்படுகொலையை மையப்படுத்தி படம் இயக்கும் ஏஞ்சலீனா ஜோலி
புற்றுநோய் பயத்தால் மார்பகங்களைத் தொடர்ந்து, கருப்பையை அகற்றிய ஹாலிவுட் நடிகை ஏஞ்ஜலினா ஜோலி
இரண்டாம் உலகப் போரின் போது உயிர் பிழைத்தவரின் கதை: எஞ்சலினா ஜோலி இயக்கிய படம் ஜன.2-ல் ரிலீஸ்
நடிப்புக்கு டாடா முழு நேர இயக்குநராகும் ஏஞ்சலினா ஜோலி!
அரசியலில் குதிக்க ஏஞ்சலினா முடிவு
ஹாலிவுட் ஜோடி ஏஞ்சலினா-பிராட் பிட் திருமணம் பிரான்சில் நடந்தது\'
நடிகர் பிராட் பிட் ஏஞ்சலினா ஜூலியை காதலிக்கவில்லை, அப்படின்னா ஏன் பிரியவில்லை?: \'சைக்கிக்\' விளக்கம்
கனவுக்கன்னியின் கண்ணீர்கதை: இணையத்தில் கசிந்த அதிரவைக்கும் வீடியோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions