புற்றுநோய் பயத்தால் மார்பகங்களைத் தொடர்ந்து, கருப்பையை அகற்றிய ஹாலிவுட் நடிகை ஏஞ்ஜலினா ஜோலி

Bookmark and Share

புற்றுநோய் பயத்தால் மார்பகங்களைத் தொடர்ந்து, கருப்பையை அகற்றிய ஹாலிவுட் நடிகை ஏஞ்ஜலினா ஜோலி

அம்மா, அத்தை, பாட்டி என்று மூன்று உறவுகளையும் புற்று நோய்க்கு பலி கொடுத்த ஏஞ்ஜலினா ஜோலி, அறுவை சிகிச்சை மூலம் தனது கருப்பையை நீக்கிவிட்டதாக நேற்று அறிவித்துள்ளார்.

ஹாலிவுட்டின் எவர்கிரீன் அழகி ஏஞ்ஜலினா ஜோலி. உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வரும் இவர் கடந்த 2013-ம் ஆண்டு மார்பக புற்று நோயால், தனது இரண்டு மார்பகங்களையும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியதாக பெரும் பரபரப்பு ஏற்பட்ட போது, அதை அவரே பகிரங்கமாக அறிவித்தார்.

அப்போதுதான் அவருக்கு பரிசோதனையில் புற்றுநோய் பாதிப்பு எதுவும் கண்டறியப்படவில்லையென்றும், தனக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை 87 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கவே ‘டபுள் மாஸ்டெக்டமி’ எனப்படும் இரண்டு மார்பகங்களையும் நீக்கும் அறுவை சிகிச்சையை அவர் மேற்கொண்டதும் தெரிய வந்தது.

இந்நிலையில் நேற்று புற்றுநோய் உண்டாகும் வாய்ப்பை தடுக்கும் வகையில் தனது கருப்பை மற்றும் கருக்குழாய்களை நீக்கியுள்ளதாக தெரிவித்தார். மேலும், சமீபத்திய ரத்த பரிசோதனையில் தனக்கு BRCA1 எனப்படும் மரபணு சடுதி மாற்றம் இருப்பதாகவும், இதனால் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதே மரபணு சடுதி மாற்றத்தைக் கொண்ட இவரது அம்மாவுக்கு 49-ம் வயதில் கருப்பை புற்றுநோய் ஏற்பட்டு அடுத்த 7 ஆண்டுகளில் அவர் இறந்து போனார். எனவே தனக்கும் அப்படி நேர்ந்து விடக்கூடுமென்ற பயத்தில் 39 வயதாகும் ஜோலி, தனது கருப்பையை நீக்கியுள்ளார்.

அமெரிக்காவின் ‘நியூயார்க் டைம்ஸ்’ இதழுக்கு எழுதிய கட்டுரையில் இந்த விவரங்களை தெரிவித்துள்ள ஜோலி, ஹாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் முன்னணியில் உள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் அகதிகளுக்கான சிறப்பு தூதராக பணியாற்றும் ஜோலி, உலகெங்கிலும் உள்ள அகதிகள் முகாம்களுக்குச் சென்று அவர்களின் வாழ்வில் பல மாற்றங்களை செய்து வருகிறார்.

ஹாலிவுட் நடிகர் பிராட் பட்டை கரம் பிடித்த ஜோலிக்கு மூன்று தத்து குழந்தைகள் உட்பட ஆறு குழந்தைகள் உள்ளனர். 

 


Post your comment





Related News
ஏஞ்சலினா ஜோலி போல் ஆக ஆசைப்பட்டு zombie போல் மாறிய பெண்!
ஏஞ்சலினா ஜோலி விவாகரத்து கேட்டு வழக்கு
முதுமையைவது மகிழ்ச்சியளிக்கிறது- ஏஞ்சலினா ஜோலி கொடுத்த அதிர்ச்சி!
கம்போடியா இனப்படுகொலையை மையப்படுத்தி படம் இயக்கும் ஏஞ்சலீனா ஜோலி
இரண்டாம் உலகப் போரின் போது உயிர் பிழைத்தவரின் கதை: எஞ்சலினா ஜோலி இயக்கிய படம் ஜன.2-ல் ரிலீஸ்
நடிப்புக்கு டாடா முழு நேர இயக்குநராகும் ஏஞ்சலினா ஜோலி!
அரசியலில் குதிக்க ஏஞ்சலினா முடிவு
ஹாலிவுட் ஜோடி ஏஞ்சலினா-பிராட் பிட் திருமணம் பிரான்சில் நடந்தது\'
நடிகர் பிராட் பிட் ஏஞ்சலினா ஜூலியை காதலிக்கவில்லை, அப்படின்னா ஏன் பிரியவில்லை?: \'சைக்கிக்\' விளக்கம்
கனவுக்கன்னியின் கண்ணீர்கதை: இணையத்தில் கசிந்த அதிரவைக்கும் வீடியோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions