கம்போடியா இனப்படுகொலையை மையப்படுத்தி படம் இயக்கும் ஏஞ்சலீனா ஜோலி

Bookmark and Share

கம்போடியா இனப்படுகொலையை மையப்படுத்தி படம் இயக்கும் ஏஞ்சலீனா ஜோலி

பிரபல ஹாலிவுட் நடிகையும், இயக்குனருமான ஏஞ்சலீனா ஜோலி இயக்கும் அடுத்த திரைப்படத்தை பற்றிய செய்திகள் தற்போது வெளியாகியுள்ளன.

கம்போடியாவைச் சேர்ந்த எழுத்தாளர் மற்றும் மனித உரிமை ஆர்வலர் லூங் உங் என்ற பெண் தனது ஐந்து வயதில் ‘கெமர் ரோக் ரெஜிம்’ என்கிற கம்போடியாவின் இன அழிப்பிலிருந்து தப்பித்த உண்மைச் சம்பவத்தை படமாக்க இருக்கின்றனர். 

கம்போடியாவில் 1975-ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்கு நிகழ்ந்த இந்த இனப்படுகொலையில் சுமார் 2 மில்லியன் கம்போடியர்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவங்களை புத்தகமாக எழுதிய லூங் 2000-ஆம் ஆண்டு ‘பர்ஸ்ட் தே கில்டு மை பாதர்’ என்ற பெயரில் வெளியிட்டுள்ளார். இத்திரைப்படத்தின் திரைக்கதையிலும் லூங் ஏஞ்சலீனாவுக்கு உதவி செய்திருக்கிறார்.

இந்த திரைப்படத்திற்கு ஏஞ்சலீனாவும், கம்போடியாவின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான ரித்தி பன் என்பவரும் இணைந்து தயாரிக்க இருக்கின்றனர். ரித்தி ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட ‘தி மிஸ்ஸிங் பிக்சர்’ திரைப்படத்தின் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படம் உலகின் முக்கிய சினிமா திரைப்பட விழாக்களுக்கு அடுத்த ஆண்டு அனுப்ப முடிவு செய்துள்ளனர்.

 


Post your comment





Related News
ஏஞ்சலினா ஜோலி போல் ஆக ஆசைப்பட்டு zombie போல் மாறிய பெண்!
ஏஞ்சலினா ஜோலி விவாகரத்து கேட்டு வழக்கு
முதுமையைவது மகிழ்ச்சியளிக்கிறது- ஏஞ்சலினா ஜோலி கொடுத்த அதிர்ச்சி!
புற்றுநோய் பயத்தால் மார்பகங்களைத் தொடர்ந்து, கருப்பையை அகற்றிய ஹாலிவுட் நடிகை ஏஞ்ஜலினா ஜோலி
இரண்டாம் உலகப் போரின் போது உயிர் பிழைத்தவரின் கதை: எஞ்சலினா ஜோலி இயக்கிய படம் ஜன.2-ல் ரிலீஸ்
நடிப்புக்கு டாடா முழு நேர இயக்குநராகும் ஏஞ்சலினா ஜோலி!
அரசியலில் குதிக்க ஏஞ்சலினா முடிவு
ஹாலிவுட் ஜோடி ஏஞ்சலினா-பிராட் பிட் திருமணம் பிரான்சில் நடந்தது\'
நடிகர் பிராட் பிட் ஏஞ்சலினா ஜூலியை காதலிக்கவில்லை, அப்படின்னா ஏன் பிரியவில்லை?: \'சைக்கிக்\' விளக்கம்
கனவுக்கன்னியின் கண்ணீர்கதை: இணையத்தில் கசிந்த அதிரவைக்கும் வீடியோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions