மகாடாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக அனில் கபூருக்கு நோட்டீஸ்!

Bookmark and Share

மகாடாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக அனில் கபூருக்கு நோட்டீஸ்!

இந்தி நடிகர் அனில் கபூர் தனியார் கட்டுமான நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்திருந்தார். இந்த விளம்பரம் சமீபத்தில் தொலைக்காட்சி, பத்திரிகை மற்றும் சமூக வலைதளங்களில் வெளியானது. அதில், “விரார் மற்றும் நாசிக்கில் மகாடாவை விட குறைவான விலைக்கு நாங்கள் வீடுகள் விற்பனை செய்கிறோம்” என்று விளம்பரப்படுத்தினார். இதற்கு மகாடா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

உண்மைக்கு புறம்பாக விளம்பரம் வெளியிட்டு, மகாடாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறி நடிகர் அனில் கபூருக்கு மகாடா சார்பில் சட்ட நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது. அதில், “விளம்பர தரநிலை விதிமுறைகளை மீறி, மகாடாவின் நற்பெயருக்கு நீங்கள் களங்கம் ஏற்படுத்தி விட்டீர்கள். ஆகையால், இதற்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இதேபோல், அந்த கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் அசோக் மோகனானிக்கும் நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. அதில், “தவறான, அங்கீகரிக்கப்படாத தகவலின் அடிப்படையில், உங்களுடைய இலக்கை நிறைவேற்ற சட்டவிரோதமாக, அப்பட்டமாக, தவறாக உங்கள் விளம்பரத்தில் மகாடாவின் பெயரை பயன்படுத்தி இருக்கிறீர்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதுபற்றி மகாடா செயலாளர் பாரத் பஸ்தேவாட்டிடம் நிருபர்கள் கேட்டதற்கு, “தகவல் உண்மையனாதா? அல்லது தவறானதா? என்பதை உறுதிப்படுத்தாமல், ஒருவர் எப்படி ஒரு நிறுவனம் சொல்கின்ற வாசகத்தை பயன்படுத்த முடியும்? அனில் கபூர் விளம்பரத்தில் நடிப்பதற்கு முன்பு, அந்த தகவல் உண்மையானது தானா என்பதை ஆராய்ந்து பார்த்திருக்க வேண்டும்” என்றார்.

இதனிடையே, இந்த குற்றச்சாட்டு குறித்து கட்டுமான நிறுவன உரிமையாளர் அசோக் மோகனானி நிருபர்களிடம் கூறியதாவது:-

நாங்கள் தவறாக எதையும் பேசிவிடவில்லை. நாசிக் மற்றும் விராரில் மகாடா அறிவித்த வீடுகளின் விலையை அடிப்படையாக கொண்டு தான் எங்களுடைய தகவலை வெளியிட்டோம். நாங்கள் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுகிறோம். மேலும், எங்களுடைய வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருக்கவே விரும்புகிறோம். முடிவு எடுக்கும் முன்பு, அதுபற்றிய விவரங்களை அறிந்தவர்களாக வாடிக்கையாளர்கள் இருக்க வேண்டும்.

இவ்வாறு அசோக் மோகனானி தெரிவித்தார்.


Post your comment





Related News
ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்
தல அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, ரசிகர்கள் உற்சாகம்..!
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
நான் நடிப்பதை நீ பார்க்க வராதே..! இப்போது வருத்தப்படும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி
சஞ்சு வசூலில் சாதனைக்கு மேல் சாதனை, முழு வசூல் விவரம்
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
இவ்வளவு கவர்ச்சியா? வைரலாகும் நடிகை வாணி கபூர் புகைப்படம்
இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!
ஸ்ரீதேவி மரணத்தால் தள்ளிப்போன நடிகை சோனம் கபூர் திருமணம்
படுக்கையறையில் கணவரின் அட்டகாசம், ஓபனாக பேசிய நடிகரின் மனைவி - ஷாக்கான ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions