இந்த வருடத்தில் அனிருத் இசையில் 5 படங்கள்!

Bookmark and Share

இந்த வருடத்தில் அனிருத் இசையில் 5 படங்கள்!

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய 3 படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத், இந்த 5 வருடங்களில் 10 படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இசையமைத்தது 10 படங்கள்தான் என்றாலும், அதற்குள்ளாகவே தமிழ்சினிமாவின் மிக முக்கியமான முன்னணி இசையமைப்பாளராகிவிட்டார் அனிருத். அவரது வளர்ச்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் சக இசையமைப்பாளர்களையும் சற்றே பொறாமைப்பட வைத்துள்ளது. 

இந்த வருடம் அனிருத் இசையமைப்பில் ஏற்கெனவே வெளிவந்த காக்கிசட்டை, மாரி ஆல்பங்களைத் தொடர்ந்து மேலும் 3 புதிய படங்களின் பாடல்களும் அடுத்தடுத்து வெளிவரவிருக்கின்றன. அந்த மூன்று ஆல்பங்களுமே அனிருத்தின் கேரியரில் மிக முக்கியமானவை.

தனுஷ் தயாரிப்பில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிக்கும் நானும் ரௌடிதான் படத்தின் பாடல்கள் செப்டம்பர் மாதத்திலும், சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் தல 56 ஆல்பம் அக்டோபரிலும், வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ்  நடிக்கும் விஐபி 2 படத்தின் பாடல்கள் நவம்பரிலும் வெளியாக உள்ளன. 

இந்த 3 படங்களின் பாடல்கள் மட்டுமின்றி படங்களும் இந்த வருடத்திற்குள்ளாகவே வெளியாக இருக்கின்றன. காக்கிசட்டை, மாரி படங்கள் உடன் 2015ல்  வெளியாக உள்ள நானும் ரௌடிதான் தல 56 விஐபி 2 ஆகிய படங்களையும் சேர்த்தால் அனிருத்தின் இசையில் இந்த ஆண்டு மட்டுமே 5 படங்கள் வெளியாகவுள்ளது.  

கடந்த 2014  ஆம் ஆண்டு கத்தி, மான் கராத்தே, வேலையில்லா பட்டதாரி என  அனிருத்தின் இசையமைப்பில் 3 படங்கள் வெளிவந்தன என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
இந்தியன்-2 ஹீரோயின் முடிவானது, இவரா? ரசிகர்கள் கொண்டாட்டம்
ரஜினி, அஜித்துக்கு பிறகு அவர் படத்தைத்தான் முதல் நாள் பார்ப்பேன் - அனிருத்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions