ஆல்பங்களுக்கு இசையமைக்க ஆர்வம் காட்டும் அனிருத்!

Bookmark and Share

ஆல்பங்களுக்கு இசையமைக்க ஆர்வம் காட்டும் அனிருத்!

சினிமாவில் கைதூக்கிவிட ஆள் இருந்தால் வெற்றியடைய முடியும் என்பதற்கு உதாரணம் இசையமைப்பாளர் அனிருத். ரஜினியின் மனைவி லதாவின் உறவினரான அனிருத்தை, தன் உறவினர் என்று வெளியே சொல்லாமலே 3 படத்தில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார் ரஜினியின் மகளான ஐஸ்வர்யா.

3 படத்தின் கொலவெறி பாடல் மூலம் உலகப்புகழ் பெற்ற அனிருத், தொடர்ந்து எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, வேலையில்லா பட்டதாரி, மான் கராத்தே, கத்தி, காக்கி சட்டை ஆகிய படங்களுக்கு இசையமைத்தார்.

அனிருத்தின் இசையமைப்பில் இதுவரை மொத்தமே 7 ஆல்பங்கள்தான் வெளிவந்திருக்கின்றன. என்ன ஆச்சர்யம்! அதற்குள் தென்னிந்தியாவின் முக்கிய இசையமைப்பாளர்களுள் ஒருவராக உயர்ந்துவிட்டார் அனிருத். தற்போது ஆக்கோ, தனுஷ் நடிக்கும் மாரி, விஜய் சேதுபதி நடிக்கும் நானும் ரௌடிதான், ரங்கூன் ஆகிய படங்களுக்கு இசையமைத்து வரும் அனிருத் மேலும் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

படங்களுக்கு இசையமைப்பது ஒருபக்கம், இன்னொரு பக்கம் பிரைவேட் மியூஸிக் ஆல்பங்களை உருவாக்கும் முயற்சிகளிலும் தீவிரமாக இருக்கிறார் அனிருத். சமீபத்தில் வெளிவந்த அவருடைய சான்ஸே இல்ல... என்ற ஆல்பத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்தது.

அந்த ஆல்பத்தின் வீடியோவில் அனிருத்தே நடித்திருந்தார். விரைவில் இன்னொரு வித்தியாசமான ஆல்பம் ஒன்றை களமிறக்கவிருக்கிறார் அனிருத். அதனைத் தொடர்ந்து முழுக்க முழுக்க கர்நாடக இசையை மையமாக வைத்து ஆல்பம் ஒன்றை உருவாக்கும் திட்டத்திலும்  இருக்கிறாராம்.

அனிருத்துக்கு ஆல்பத்தின் மீது ஆர்வம் ஏற்பட என்ன காரணம்? சினிமா அல்லாத ஆல்பத்துக்கு இசையமைப்பது தன்னுடைய கனவு என்கிறார் அனிருத். அவரது சான்ஸே இல்லை ஆல்பத்துக்குக் கிடைத்த வரவேற்பும் மற்றொரு காரணம்.


Post your comment





Related News
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
இந்தியன்-2 ஹீரோயின் முடிவானது, இவரா? ரசிகர்கள் கொண்டாட்டம்
ரஜினி, அஜித்துக்கு பிறகு அவர் படத்தைத்தான் முதல் நாள் பார்ப்பேன் - அனிருத்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions