பேய் படங்களுக்கு இசையமைக்க பயப்படும் அனிருத்

Bookmark and Share

பேய் படங்களுக்கு இசையமைக்க பயப்படும் அனிருத்

‘ஆல் இன் பிச்சர்ஸ்’ விஜயராகவேந்திரா தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சாய் பரத் இயக்கி இருக்கும் படம் ‘ரம்’. இதில் ரிஷிகேஷ், சஞ்சிதா ஷெட்டி, மியா ஜார்ஜ், நரேன், விவேக் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

விழாவில் பேசிய விவேக், ‘ரம்’ திரைப்பட குழுவினரை போன்ற இளம் கூட்டணியோடு பணியாற்றியது, எனக்கு புது உற்சாகத்தை அளித்தது. என்னை மீண்டும் இளமையாகவும் மாற்றி இருக்கின்றது. நம்முடைய இளைஞர்களின் மனதை இசையால் கவருவது எளிதான காரியம் அல்ல.

ஆனால் அதை தன்னுடைய மனதை வருடும் இசையால் செய்திருக்கிறார் அனிருத். இளையராஜா என்னும் இசை கடலில் கண்டெடுத்த முத்துதான் அனிருத் என்றார்.
அனிருத் பேசும்போது, பொதுவாகவே பேய் படங்கள் என்றால் எனக்கு அவ்வளவு பயம். அது மட்டுமல்ல-13 ஆம் நம்பர் என்பது பேய்களை குறிக்கும் எண் என்பதால், அந்தஎண்ணின் மீதும் எனக்கு பயம் தான். ஆனால் இப்போது நான் இசையமைத்திருக்கும் ‘ரம்‘, என்னுடைய 13 ஆவது படம். அதுவும் பேய் படம் என்று பயத்துடனே கூறினார்.

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் விஜயராகவேந்திரா, இயக்குனர் சாய்பரத், ரிஷிகேஷ், சஞ்சிதா ஷெட்டி, நரேன், பாடல் ஆசிரியர் மதன் கார்க்கி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Post your comment





Related News
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
இந்தியன்-2 ஹீரோயின் முடிவானது, இவரா? ரசிகர்கள் கொண்டாட்டம்
ரஜினி, அஜித்துக்கு பிறகு அவர் படத்தைத்தான் முதல் நாள் பார்ப்பேன் - அனிருத்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions