பெருகி வரும் சாங் மேக்கிங் வீடியோக்கள்!

Bookmark and Share

பெருகி வரும் சாங் மேக்கிங் வீடியோக்கள்!

ஒரு காதலத்தில் பாடல் ஒலிப்பதிவுக்கூடம் என்பது பரம ரகசியமான ஒரு பகுதி. இசை அமைப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர் தவிர வேறு யாரும் உள்ளே நுழைய முடியாது. இளையராவின் பிரசாத் ரிக்கார்டிங் ஸ்டூடியோவிற்குள் போய் வந்தால் திருப்பதி மூலஸ்தானத்துக் போய் வந்த மாதிரி. ஆனால் இப்போது எல்லாமே தலைகீழாகிவிட்டது. இசை அமைப்பாளர்களின் ஒலிப்பதிவு கூடத்தின் சந்து பொந்தில்கூட வீடியோ கேமராக்கள் புகுந்து வெளிவருகிறது.

ஒரு படத்திற்கு இப்போது விளம்பரம் ரொம்ப முக்கியம். எந்த வடிவத்திலாவது படத்தையும், பாடலையும் மக்களுக்கு கொண்டு சென்றே ஆக வேண்டும். அதற்கு ஒரு வழியாக மாறியிருப்பது சாங் மேக்கிங் வீடியோக்கள். ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய 3 படத்தில் "ஒய் திஸ் கொல வெறி பாடல்தான் இந்த டிரண்டை துவக்கி வைத்தது. படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சியை விட மேக்கிங் வீடியோதான் வைரல் ஹிட்டானது. அன்று முதல் எல்லோரும் இதனை கெட்டியாக பிடித்துக் கொண்டார்கள். இப்போது எல்லா படத்திற்கும் சாங் மேக்கிங் வீடியோக்கள் வரத் தொடங்கிவிட்டது. 

அதிலும் கொஞ்சம் கமர்ஷியல் அம்சம் இருக்க வேண்டும் என்பதற்காக நடிகர் நடிகைகளை பாட வைத்து அந்தப் பாடலின் மேக்கிங் வீடியோக்களை வெளியிடுகிறார். நேற்று மட்டும் வில் அம்பு படத்தில் அனிருத் பாடிய ஒரு பாடலின் மேக்கிங் வீடியோவும், கொழம்பி என்ற படத்திற்கு லட்சுமிமேனன் பாடிய பாடலின் மேக்கிங் வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். விளம்பர வெறியில் அடுத்து என்ன கான்செப்ட் பிடிக்க போகிறார்களோ தெரியவில்லை.


Post your comment





Related News
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
இந்தியன்-2 ஹீரோயின் முடிவானது, இவரா? ரசிகர்கள் கொண்டாட்டம்
ரஜினி, அஜித்துக்கு பிறகு அவர் படத்தைத்தான் முதல் நாள் பார்ப்பேன் - அனிருத்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions