
‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் தனுஷின் தம்பியாக நடித்தவர் ஹிரிஸ்கேஷ். இவர் தற்போது ரம் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தை சாய் பரத் என்பவர் இயக்குகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி, மியா ஜார்ஜ் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவிருக்கிறார். ‘பீப்’ பாடல் சர்ச்சைக்கு பிறகு அனிருத் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ள படம் என்பதால், இப்படத்தின் மீது இப்போதே எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
ஹிரிஸ்கேஷ் அறிமுகமான ‘வேலையில்லா பட்டதாரி’ படத்துக்கும் அனிருத் இசையமைத்திருந்தார். தற்போது ஹீரோவாக களமிறங்கியுள்ள ‘ரம்’ படத்திற்கும் அனிருத் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் விவேக்கும் நடிக்கவிருக்கிறார். ‘ரம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.
இப்படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் விஜய ராகவேந்திரா தயாரிக்கிறார். இவர் ஏற்கெனவே, பாபி சிம்ஹா, சிவா, கௌரவ் நடிப்பில் வெளிவந்த ‘மசாலா படம்’ என்ற படத்தை தயாரித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Post your comment