தெலுங்கிலும் அமோக வரவேற்பு பெற்ற அனிருத்

Bookmark and Share

தெலுங்கிலும் அமோக வரவேற்பு பெற்ற அனிருத்

அனிருத் இசையில் வெளியான பாடல்கள் இளைஞர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. தமிழில் முன்னணி இசை அமைப்பாளர் பட்டியலில் இடம் பிடித்துள்ள அனிருத்துக்கு தெலுங்கிலும் வாய்ப்புகள் வந்தன.

இப்போது பவன் கல்யாண்-கீர்த்தி சுரேஷ் நடிக்கும் தெலுங்கு படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். திரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கும் இந்த படம் டிசம்பரில் வெளியாக இருக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் ஒரு பாடல் இயக்குனர் திரிவிக்ரம் சீனிவாஸ் பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்டது.

‘பைட்டி கொச்சி சூஸ்தே...’ என்ற அந்த பாடல் யூடியூப்பில் வெளியிடப்பட்டது. பாடல் வெளியான சில மணி நேரத்திலேயே லட்சக்கணக்கானவர்கள் இந்த பாடலை கேட்டு ரசித்து இருக்கிறார்கள். பாடல் ஹிட் ஆகி உள்ளது.

இதனால் தெலுங்கிலும் அனிருத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்து இருக்கிறது. இதுவரை தமிழ் படங்களுக்கு மட்டுமே இசை அமைத்து வந்த அனிருத்துக்கு தெலுங்கில் வெளியான முதல் அறிமுக பாடலே ரசிகர்களிடம் பிரபலமாகி இருக்கிறது. அடுத்து ஜூனியர் என்.டி.ஆர். படத்துக்கு அனிருத் இசை அமைக்க இருக்கிறார். 


Post your comment





Related News
இது அனிருத்தே இல்லை, இந்த லேடி தானாம் - வெளிவந்த உண்மை புகைப்படம்.!
பெண்ணாக மாறிய அனிருத், ஷாக்கான ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்.!
கார்த்திக் சுப்புராஜ்-ரஜினி படத்தின் இசையமைப்பாளர் யார்- வெளியான அதிகாரப்பூர்வ தகவல்
OMG அனிருத்துக்கு முதலிடம் ஆனால் அஜித், விஜய், சூர்யாவுக்கு இப்படியா? - அதிர்ச்சி ரிப்போர்ட்.!
அனிருத்தின் அப்பா இந்த பிரபல நடிகரா? - புகைப்படம் உள்ளே.!
புதிய தொழில் துவங்கிய அனிருத்
மீண்டும் மெகா ஹிட் கூட்டணியுடன் விக்னேஷ் சிவன் படம் - புகைப்படம் உள்ளே.!
இன்று அனிருத் ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோ பாடல் வெளிவருகிறதா ?
சமுதாய அக்கறை கொண்ட படத்தை ரசிகர்கள் நிச்சயம் ரசிப்பார்கள் என்பது மறுபடியும் இப்படம் நிரூபித் துள்ளது - வேலைக்காரன் படக்குழுவினர் !
அனிருத்தை மொத்தமாக கைகழுவிய தனுஷ்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions