காதலிக்கலாம், ஆனால் 2 பிரச்சனை உள்ளதே: அனிருத்

Bookmark and Share

காதலிக்கலாம், ஆனால் 2 பிரச்சனை உள்ளதே: அனிருத்

காதலி இல்லாவிட்டாலும் சந்தோஷமாக இருப்பதாக இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார். 

இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக காதலர் தினத்தன்று ஒரு பாடலை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் அனிருத். 

இந்த ஆண்டு ஒன்னுமே ஆகல பாடலை சரியாக நள்ளிரவு 12 மணிக்கு வெளியிட்டுள்ளார். 
இந்நிலையில் காதல் குறித்து அவர் கூறுகையில்,

நான் சிங்கிளாக மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். காதலி இல்லையே என்ற வருத்தம் இல்லை. என்னை காதலிப்பது கஷ்டம். என்னை கையாள்வது கஷ்டம்.

என் பணி நேரம் வித்தியாசமானது. நான் செல்போனும், கையுமாக இருக்கும் ஆள் இல்லை. சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லிவிட்டு போனை வைத்துவிடுவேன். அவ்வளவு தான்.

செல்போனில் குறுந்தகவல் அனுப்புவது எல்லாம் வேலைக்கு ஆகாது. இது தான் முதல் பிரச்சனை. நான் காதலை தற்போது எதிர்பார்க்கவில்லை. இது அடுத்த பிரச்சனை.

என் வேலை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இசையில் புதியவற்றை தெரிந்து கொள்கிறேன். காதலில் விழ வேண்டும் என்ற எண்ணமே இல்லை. ஆனால் நிச்சயம் ஒருவரை நான் காதலிப்பேன். கடந்த கால உறவுகளை பற்றி நினைப்பது இல்லை என அனிருத் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
சந்தானத்திற்காக சிம்பு இசையமைக்க, அனிருத் பாட- வீடியோவை வெளியிட்ட நடிகர்
விவேகம் படத்தில் அந்த ஒரு மாஸ் காட்சிக்காகத்தான் காத்திருக்கிறேன்! அனிருத்
அனிருத் இசையில் அரங்கம் அதிர வருகிறது ரம்
சிவகார்த்திகேயனுக்காக ஸ்பெஷல் பாடல்! மீண்டும் அனிருத்
காதலர் தினத்தில் அனிருத் கொடுக்கவுள்ள சர்ப்ரைஸ்
தென்னிந்தியாவில் யாருக்கும் கிடைக்காத இடம்.. அனிருத் சாதனை
தனுஷை அடுத்து அனிருத்- ஸ்பெஷல்
அனிருத் வீடியோ... செலபிரிட்டி கூட ஃபோட்டோ எடுத்துக்கொள்ளும் பெண்களே... உஷார்!
அஜித் வேதாளத்தை விட அந்த படத்தின் பாடல்களை கேட்டு தான் மிகவும் பாராட்டினார்- அனிருத் ஓபன் டாக்
சர்ச்சைக்கு வீடியோவுக்கு பிறகு அனிருத் வெளியிட்ட வீடியோ!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions