ஒரு மில்லியன் சாதனையைத் தொட்ட அனிருத்

Bookmark and Share

ஒரு மில்லியன் சாதனையைத் தொட்ட அனிருத்

இன்றைய இளம் இசையமைப்பாளர்களில் இளைஞர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றவராக இருப்பவர்களில் அனிருத் குறிப்பிடத்தக்கவர். அறிமுகமாகி சில படங்களில் இசையமைத்த உடனேயே மிகவும் பிரபலமாகிவிட்டார். 

அதற்கு அவரைப் பற்றிப் பேச வைத்த ஒய் திஸ் கொலைவெறி' பாடலும் ஒரு காரணமாகிவிட்டது. அதன் பின் அவர் இசையமைத்த பாடல்களும், படங்களும் குறிப்பிடத்தக்க ஹிட்டைப் பெற்றது. குறுகிய காலத்திற்குள்ளாகவே விஜய் நடித்த கத்தி படத்திற்கு இசையமைத்தவர், தற்போது அஜித் நடிக்கும் படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.

டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் அதிக பரபரப்புடன் பேசப்படுபவர்களில் ஒருவராக அனிருத்தும் இருக்கிறார். தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோரைத் தொடர்ந்து அந்த காம்பவுண்டில் இருக்கும் அனிருத்தும் தற்போது டிவிட்டரில் ஒரு மில்லியன், அதாவது பத்து லட்சம் தொடர்பாளர்களைப் பெற்ற கலைஞராக ஆகியிருக்கிறார். 

சில தினங்களுக்கு முன் அந்த சாதனையை அனிருத் படைத்திருக்கிறார். இன்றைய இளம் இசையமைப்பாளர்களில் டுவிட்டரில் அதிகப்படியான தொடர்பாளர்களைப் பெற்றுள்ளவராக அனிருத் இருக்கிறார். 

சில தினங்களுக்கு முன்தான் அவர் இசையமைத்துள்ள மாரி படத்தின் பாடல்கள் வெளியானது. அடுத்து விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்துள்ள நானும் ரௌடிதான்' படப் பாடல்கள் வெளியாக உள்ளன.  


Post your comment





Related News
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
இந்தியன்-2 ஹீரோயின் முடிவானது, இவரா? ரசிகர்கள் கொண்டாட்டம்
ரஜினி, அஜித்துக்கு பிறகு அவர் படத்தைத்தான் முதல் நாள் பார்ப்பேன் - அனிருத்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions