தப்பிக்க நினைத்தார் அனிருத்! : கோர்த்து விட்டார் டி.ஆர்!

Bookmark and Share

தப்பிக்க நினைத்தார் அனிருத்! : கோர்த்து விட்டார் டி.ஆர்!

நல்ல மனநிலையில் இருப்பவர்களால் மட்டுமே தன் பக்கம் எந்த பாதகமும் வராமல் பத்திரிகையாளர் கேட்கும் கேள்விக்கு நிதானமாக பதிலளிக்க முடியும்.

ஆனால் சிம்புவிடம் அந்த நிதானமெல்லாம் முற்று முழுதாக விடைபெற்று ஆண்டுகள் பல ஆகி விட்டது. அவருடைய சமீபகால நடவடிக்கைகள் எல்லாமே அப்படிப்பட்ட ‘டிசைன்’ தான்.

‘பீப் சாங்’ என்ற பெயரில் அனிருத்தும், அவரும் செய்த கேடுகெட்ட செயல் உலகம் முழுக்க உள்ள இசை ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

”நானும், அனிருத்தும் சேர்ந்து தான் அந்தப் பாடலை கம்போஸ் செய்தோம். அதேமாதிரி இன்னும் 150 பாடல்கள் என்கிட்ட இருக்கு. யாரோ என்னோட மொபைல்ல இருந்து திருடி ஆன்லைன்ல லீக் பண்ணிட்டாங்க. என் வீட்டு பெட்ரூமை ஏன் எட்டிப் பார்க்கிறீங்க. இது என்னோட தனி மனித சுதந்திரம்” என்றெல்லாம் போனைப் போட்டு விளக்கம் கேட்ட பத்திரிகை நிருபர்களிடம் சீறினார் சிம்பு.

இந்த தரங்கெட்ட வேலையைக் கண்டித்து கோவையில் மகளிர் அமைப்பினர் சிம்பு – அனிருத்தின் புகைப்படங்களுக்கு செருப்படி கொடுத்து, எதிர்ப்பை தெரிவிக்க அதேநேரம் கனடாவில் ஒரு இசை நிகழ்ச்சிக்காக சென்றிருந்தார் அனிருத்.

விவகாரம் அங்கே இருக்கும் அனிருத் காதுகளையும் எட்ட பதறிப்போய் விட்டார்.

”நான் தமிழ்நாட்டு மக்களுக்கு சமப்பணம் செய்வதற்காக கனடாவில் டொரண்டோ இசை நிகழ்ச்சியில் இருக்கிறேன். இந்த நேரத்தில் இப்படிப்பட்ட சர்ச்சையில் என்னுடைய பெயரும் இணைந்திருப்பது ஆச்சரியமளிக்கிறது. அந்த பீப் சாங் என்னுடைய இசையிலோ, என்னுடைய எழுத்திலோ, நான் பாடியோ தயாராகவில்லை.

நான் பெண்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பவன். அது என்னுடைய இசையில் வெளியாகும் படங்களின் பாடல்களிலேயே தெளிவாகத் தெரியும். இத்துடன் இந்த சர்ச்சைக்கு வருத்தத்துடன் முற்றுப்புள்ளி வைக்கிறேன்” என்று விளக்கம் கொடுத்தார்.

அனிருத்திடமிருந்து இந்த மறுப்பு வந்த அரை மணி நேரத்துக்குள்ளாகவே சிம்புவின் அப்பா டி.ஆரிடமிருந்து ஒரு மெயில் வந்தது. திறந்து பார்த்தால் அது சைபர் கிரைமுக்கு புகார் கடிதம் எனத் தெரியவந்தது. படித்துப் பார்த்தால் முந்திக்கொண்டு வந்த சிரிப்பை அடக்காமல் இருக்க முடியவில்லை.

ஏனென்றால் எந்த அனிருத் எனக்கும் அந்த ‘பீப் சாங்’குக்கும் சம்பந்தம் இல்லை என்று சொன்னாரோ? அதே அனிருத் தான் அந்த பாடலுக்கு இசையமைத்திருந்தார் என்று புகார் கடிதத்தில் கவனமாகக் குறிப்பிட்டிருந்தார் டி.ஆர்.

மேலும் அனிருத் இசையில என் மகன் பாடின அந்தப் பாட்டு எந்த படத்திலும், ஆல்பத்திலும் இல்லை. அது பெர்சனலா ரெடி பண்ணினது. அதை யாரோ திருடி இணையதளத்துல லீக் பண்ணிருக்காங்க. என்ற டி.ஆர். அடுத்து எழுதியிருப்பது தான் கிரேட் ‘எஸ்கேப்’ ரகம்.

அந்தப் பாடலில் இடம்பெற்ற ஒரிஜினல் வார்த்தைகளை எடுத்து விட்டு அதற்குப் பதிலாக ஆபாச வார்த்தைகளைச் சேர்த்திருக்கிறார்கள். அது யார் என்பதையும் கண்டுபிடித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

இப்போது விவகாரம் போலீசில் புகார் வரை சென்று இருவரையும் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் கைது செய்ய சென்னை வந்திருக்கிறதாம் கோவை போலீஸ்!


Post your comment

Related News
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
இந்தியன்-2 ஹீரோயின் முடிவானது, இவரா? ரசிகர்கள் கொண்டாட்டம்
ரஜினி, அஜித்துக்கு பிறகு அவர் படத்தைத்தான் முதல் நாள் பார்ப்பேன் - அனிருத்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions