அனிருத்தின் புதிய திட்டம்

Bookmark and Share

அனிருத்தின் புதிய திட்டம்

‘பீப்’ பாடல் பிரச்சினை அனிருத் மனதை மிகவும் பாதிப்படைய செய்துள்ளது. இருப்பினும், தன்னுடைய இசையில் காதலர் தினமான நேற்று ‘அவளுக்கென்ன’ என்ற தனி ஆல்பம் ஒன்றை அனிருத் பாடி வெளியிட்டுள்ளார். இந்த பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 

இதனால், இனிவரும் காலங்களில் படத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட தனி ஆல்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க அனிருத் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வருடத்தில் அஜித் நடிக்கும் புதிய படம், விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படம், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் புதிய படம் ஆகிய 3 படங்களுக்கு மட்டுமே அனிருத் ஒப்பந்தமாகியுள்ளார். 

வரிசையாக படங்களில் ஒப்புக்கொள்ளாமல், குறிப்பிட்ட சில படங்களுக்கு மட்டுமே இசையமைக்கவும் அனிருத் திட்டமிட்டுள்ளாராம். அதற்கு பதிலாக இசை விழா மற்றும் ஆல்பங்களில் தனது நேரத்தை செலவிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

அனிருத் ஏற்கெனவே பாடி வெளியிட்ட ‘சான்ஸே இல்ல’ என்ற தனி ஆல்பம் பெரிய அளவில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
இந்தியன்-2 ஹீரோயின் முடிவானது, இவரா? ரசிகர்கள் கொண்டாட்டம்
ரஜினி, அஜித்துக்கு பிறகு அவர் படத்தைத்தான் முதல் நாள் பார்ப்பேன் - அனிருத்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions