அனிருத்துக்கு அதிர்ச்சி கொடுத்த சந்தோஷ் நாராயணன்!

Bookmark and Share

அனிருத்துக்கு அதிர்ச்சி கொடுத்த சந்தோஷ் நாராயணன்!

கொலவெறி அனிருத் சமீபகாலமாக மெகா ஹிட் பாடல்களை கொடுத்து விஜய், அஜித் என்று ஏறுமுகத்தில் சென்று கொண்டிருந்தார். அதோடு, அடுத்த கட்டமாக ரஜினியின் புதிய படவாய்ப்பையும் கைப்பற்றி நம்பர்-ஒன்னாகி விட வேண்டும் என்பதுதான் அவரது நோக்கமாக இருந்து வந்தது.

அதற்கான முயற்சியில் அவர் திரைக்குபின்னால் இறங்கினபோதும், ஏ.ஆர்.ரகுமானே சமீபகாலமாக ரஜினி படங்களுக்கு தொடர்ச்சியாக இசையமைத்து வந்ததால் ரஜினி தரப்பில் அவருக்கு சாதனமாக கிரீன் சிக்னல் விழாமல் இருந்தது.

ஆனபோதும், காலநேரத்திற்காக காத்துக்கொண்டிருந்தார் அனிருத். இந்த நேரத்தில்தான், லிங்கா கொடுத்த அதிர்ச்சி தோல்வி காரணமாக, ரஜினிக்கு பழைய கூட்டணியில் இருந்து விடுபட்டு ஒரு புதிய கூட்டணி அமைத்தாகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அதனால்தான் தற்போது இளவட்ட இயக்குனரான ரஞ்சித் இயக்கத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். மேலும், எனது முந்தைய படங்களான அட்டகத்தி, மெட்ராஸ் என்ற இரண்டு படங்களுக்கும் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த ராசியான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் என்று அவர் பெயரை ரஞ்சித் முன்மொழிந்தபோது எந்தவித மறுப்பும் சொல்லாமல் உடனே ஓகே சொல்லி விட்டாராம் ரஜினி. விளைவு, ரஜினி படத்துக்கு தற்போது இசையமைத்துக்கொண்டிருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.

இதனால் ரஜினி, ரகுமான் கூட்டணியில் இருந்து விலகி வந்தபோதும் அந்த இடத்துக்கு தன்னால் வர முடியவில்லையே என்று பீல் பண்ணிக்கொண்ருக்கிறாராம் அனிருத். அவரது அபிமானிகளோ, சினிமாவில் மாற்றங்கள் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. அதனால் ரஜினி படவாய்ப்பு உங்களுக்கு சீக்கிரமே கிடைக்கும் என்று அவரை ஆறுதல்படுத்தி வருகிறார்களாம்.


Post your comment





Related News
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
இந்தியன்-2 ஹீரோயின் முடிவானது, இவரா? ரசிகர்கள் கொண்டாட்டம்
ரஜினி, அஜித்துக்கு பிறகு அவர் படத்தைத்தான் முதல் நாள் பார்ப்பேன் - அனிருத்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions