பாப்புலரான அனிருத்!

Bookmark and Share

பாப்புலரான அனிருத்!

சிவகார்த்திகேயனை மாதிரி இசையமைப்பாளர் அனிருத்தும் அரை டஜன் படங்களுக்குத்தான் இசையமைத்திருக்கிறார். அதற்குள் அவரும் சிவகார்த்திகேயனை மாதிரி பாப்புலராகி விட்டார்.

அவர் எங்கு சென்றாலும் அவரை மொய்த்துக்கொள்ளும் ரசிகர்கள் ஆட்டோகிராப் கேட்டு துரத்துகிறார்களாம். மேலும், குறுகிய காலத்தில் தான் இந்த அளவுக்கு பிரபலமானதற்கு தான் இசையமைத்த பாடல்களின் ஹிட்டுதான் காரணம் என்றபோதும், அதற்கு காரணமானவர்களாக விஜய், தனுஷ், சிவகார்த்திகேயனைத்தான் குறிப்பிடுகிறார் அனிருத்.

இன்றைய நிலையில், என்னதான் நல்ல டியூன்களை கொடுத்தாலும், அது பிரபல நடிகர் நடிகைகள் படங்களில் இடம்பெறும்போதுதான் ஹிட்டாகின்றன. அதனால் என் பாடல்களின் வெற்றிக்கு அந்தந்த படங்களின் ஹீரோக்களும் முக்கிய காரணமாகிறார்கள் என்று மேற்படி ஹீரோக்களின் பெயரை குறிப்பிட்டு சொல்லி வரும் அனிருத், கோலிவுட்டில் முன்னணியில் இருக்கும் மூன்று ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து விட்டபோதும் அடுத்தபடியாக அஜீத், சூர்யா போன்ற தனது அபிமானத்திற்குரிய ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்தால் இன்னும் பாப்புலராகி விடலாம் என்ற எண்ணமும் தற்போது ஏற்பட்டிருப்பதால் அவர்களின் படங்களை கைப்பற்றும் தீவிர முயற்சியிலும் இறங்கியிருக்கிறார்.

அதையடுத்து, இதுவரை தனது பர்சனல் செல்போன் நம்பரை சீக்ரெட்டாக வைத்திருந்த அனிருத், தற்போது சம்பந்தப்பட்ட நடிகர்களின் வட்டாரங்களுக்கு தன்னை தொடர்பு கொள்ளும் எண்களை பாஸ் பண்ணி வருகிறார்.


Post your comment





Related News
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
இந்தியன்-2 ஹீரோயின் முடிவானது, இவரா? ரசிகர்கள் கொண்டாட்டம்
ரஜினி, அஜித்துக்கு பிறகு அவர் படத்தைத்தான் முதல் நாள் பார்ப்பேன் - அனிருத்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions