அனிருத்தின் தோழமை!

Bookmark and Share

அனிருத்தின் தோழமை!

3, எதிர்நீச்சல், மான்கராத்தே, வேலையில்லா பட்டதாரி, கத்தி என பல படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து மார்க்கெட்டில் இருக்கும் இசையமைப்பாளர்களை மிரட்டியவர் அனிருத்.

அதேசமயம், மற்றவர்களை அவர் போட்டியாகவும் நினைக்கவில்லை. அனைவரிடமும் தோழமையுடன் பழகி வருகிறார். அதனால் அவரது வளர்ச்சியைப்பார்த்து போட்டி மனப்பான்மையுடன் பார்த்தவர்கள்கூட இப்போது அவரை தங்களது இசையில் பாட வைத்து வருகின்றனர்.

அந்த வகையில், மரியான் படத்தில் கொம்பன் சுறா பாடலை யுவன் ஷங்கர் ராஜாவை அழைத்து பாட வைத்த ஏ.ஆர்.ரகுமான்கூட, ஐ படத்துக்காக மெர்சலாயிட்டேன் பாடலை அனிருத்தை அழைத்து பாட வைத்தார். அந்த பாடலும் சூப்பர் ஹிட்டானது.

அதையடுத்து, டி.இமானும் ரோமியோ ஜூலியட் படத்தில் டன்டனக்கா பாடலை அனிருத்தை வைத்து பாட வைத்தார். இப்படியாக மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் தொடர்ந்து பாடி வரும் அனிருத், தற்போது இயக்குனர் சுசீந்திரன் தயாரித்துள்ள வில்அம்பு படத்தில் நவின் என்ற இசையமைப்பாளரின் இசையிலும் ஒரு பாடல் பாடியிருக்கிறார்.

ஆனால் இந்த பாடலை தான் மட்டுமின்றி இன்னொரு இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாசுடன் இணைந்து பாடியிருக்கிறார் அனிருத்.


Post your comment





Related News
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
இந்தியன்-2 ஹீரோயின் முடிவானது, இவரா? ரசிகர்கள் கொண்டாட்டம்
ரஜினி, அஜித்துக்கு பிறகு அவர் படத்தைத்தான் முதல் நாள் பார்ப்பேன் - அனிருத்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions