அரை மணி நேரத்தில் ஒரு பாடலை பாடி முடித்த அனிருத்

Bookmark and Share

அரை மணி நேரத்தில் ஒரு பாடலை பாடி முடித்த அனிருத்

இசையமைப்பாளர் அனிருத் இசையில் அமையும் பாடல்களாகட்டும், அவர் மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் பாடும் பாடல்களாகட்டும் அவை அனைத்தும் ரசிகர்களை பெரிதும் கவரும் பாடல்களாக அமைகின்றன. அதனால், அவரை தங்களது இசையில் பாட வைக்க பல்வேறு இசையமைப்பாளர்களும் போட்டி போடுகின்றனர். 

அந்த வரிசையில் தற்போது ஜெய் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘புகழ்’ படத்தில் அனிருத் ஒரு பாடல் பாடியிருக்கிறார். ‘நாங்க பொடியன்தான்’ என்று தொடங்கும் அந்த பாடல் குத்து பாடலாக அமைந்துள்ளது. 

விவேக்-மெர்வின் ஆகியோர் இணைந்து இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளனர். அரை மணி நேரத்தில் இந்த பாடலை பாடி முடித்துக் கொடுத்துள்ளார் அனிருத் இந்த பாடலை படத்தில் ஜெய்யின் அறிமுக பாடலாக வைக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். 

‘புகழ்’ படத்தை ‘உதயம் என்.எச்.14’ படத்தை இயக்கிய மணிமாறன் இயக்கியுள்ளார். வருகிற ஜூலை 3-ந் தேதி இப்படத்தின் பாடல்களை வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
இந்தியன்-2 ஹீரோயின் முடிவானது, இவரா? ரசிகர்கள் கொண்டாட்டம்
ரஜினி, அஜித்துக்கு பிறகு அவர் படத்தைத்தான் முதல் நாள் பார்ப்பேன் - அனிருத்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions