அனிருத்திற்கு அட்வைஸ் செய்த தல; உண்மையை சொல்லும் இயக்குனர்

Bookmark and Share

அனிருத்திற்கு அட்வைஸ் செய்த தல; உண்மையை சொல்லும் இயக்குனர்

அஜித் நடித்த 'வேதாளம்' பட டிரைலர் இன்று இரவு 12 மணிக்கு வெளியாக உள்ளது.

இப்படத்தின் இயக்குனர் சிவா சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அந்த பேட்டியில் அனிருத்தை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களைக் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது :

வேதாளம் படத்திற்காக முதன்முறையாக அனிருத்தை சந்தித்த போது, இவ்வளவு சின்னப்பையனா இருக்கிறாரே இவர்கூட நாம எப்படி வேலை செய்யப்போறோம்’னு ஒரு டவுட். ஆனால் ஃபுல் ஆஃப் எனர்ஜி. பெரிய டேலன்ட். என்ன..., நைட் டைம் தான் எப்பவும் கூப்பிடுவாப்ல, அதுதான் பிரச்சனை. 

அனிருத், அஜித்தின் தீவிர ரசிகர். படத்தின் கதையை அவரிடம் கூறும்போது, ஒரு சோபாவுல இருந்து டமால் டுமில்'னு கத்திக் குதிக்கிறது, சிரிக்கிறது'னு எகிறிட்டே இருந்தாப்ல. அஜித் படத்த பார்த்தா அவரோட ரசிகர்கள் எவ்வளவு எக்சைட் ஆவாங்க'னு அனிருத் முகத்துலயே தெரிஞ்சுது. ‘நாங்க தல ஃபேன் சார். இந்தப் படத்தை தெறிக்கவிடுறோம் சார்’னு சொல்லிட்டே இருப்பார்.

‘வீர விநாயகா’ ஷூட் சமயத்துல தான் அனிருத்தை, அஜித் சாரைப் பார்க்க கூட்டிட்டுப் போயிருந்தோம். அஜித்தை பார்த்ததும் அனிருத் கையெல்லாம் நடுங்குது. அவ்வளவு எக்சைட்டா இருந்தார். ‘நல்லாப் பண்ணுங்க, நல்ல படங்கள் பண்ணுங்க’ என்று அவருக்கு அஜித் அட்வைஸ் பண்ணினார், என்று சிவா கூறியுள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions