தல 56 படத்துக்காக தீயாய் வேலை செய்யும் அனிருத்

Bookmark and Share

தல 56 படத்துக்காக தீயாய் வேலை செய்யும் அனிருத்

ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் வீரம் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. சென்னையில் படப்பிடிப்பு முடிந்ததும்  தல 56 படக் குழுவினர் அடுத்த மாதம் கொல்கத்தா செல்ல திட்டமிட்டுள்ளனர். 

கொல்கத்தா ஷெட்யூலை முடித்த கையோடு சில நாட்கள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சென்னையில் படப்பிடிப்புக்கு திட்டமிட்டுள்ளனர். இத்தனை வேகம் ஏன்? தயாரிப்பாளர் சங்கத்தின் கட்டளைப்படி பெரிய பட்ஜெட் படங்கள் பண்டிகை தினங்களில்தான் ரிலீஸ் செய்ய வேண்டும்.

எனவே தல 56 படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய ரிசர்வ் செய்துள்ளனர். எனவேதான், பட வேலைகளை விறுவிறுப்பாக செய்து வருகின்றனர்.  அஜித், இயக்குனர் சிவா ஆகியோருடன் இந்த படத்தின் மூலம் முதன் முதலாக கூட்டணி அமைத்துள்ளார் இசை அமைப்பாளர் அனிருத். இவர், ட்யூன் கொடுப்பதற்கு தாமதம் செய்வார், போன் செய்தால் எடுக்க மாட்டார், பின்னணி இசைக்கு மாதக்கணக்கில் இழுத்தடிப்பார் என்ற புகார்கள் இருப்பதால் அனிருத்திடமிருந்து முன்கூட்டியே பாடல்களை வாங்க சூப்பர் பிளான் போட்டார் இயக்குநர் சிவா.

அக்டோபர் 16-ஆம் தேதி அனிருத் பிறந்த நாள்! அன்றைய தினம் தல 56 படத்தின் பாடல்களை வெளியிட வேண்டும் என அஜித் விரும்புவதாக ஒரு பிட்டைப்போட, தீயாய் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டாராம் அனிருத்.


Post your comment





Related News
மீண்டும் பழைய டீமுடன் இணையும் தல அஜீத்
இணையத்தில் லீக்கான தல56ன் ‘கெத்த விடாத கெத்த விடாத..’ பாடல் வீடியோ
தல56 ஃபர்ஸ்ட் லுக் வெளியான 10நிமிடத்திலேயே திரையுலகையே ஆச்சரியப்பட வைத்த அஜித் ரசிகர்கள்
இந்த தீபாவளி “தல தீபாவளி”
தல-56 புதிய சாதனை
தல56 பற்றிய டுவிட்டால் இயக்குனர் சிவாவிடம் திட்டுவாங்கிய ரோபோ ஷங்கர்!
உண்மையில் தல56 டைட்டில் வெளிவராதது ஏன்?
தல56 ஐ வித்யுலேகா மறந்தது ஏன்?
நாளை தல-56 டைட்டீல்!
‘தல 56′ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு, உற்சாகத்தில் ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions